கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிரிவின் நினைவுகள் கவிதை -25

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
என்னருகில் வராதீர் !
++++++++++++++

+++++++++++++
பிரிவின் நிழல் !
++++++++++++++

பிரிவென்றால் நன்றாகத்
தெரியும் நமக்கு
பிணைப்பு உறவை நாம்
சுவைத்தி ருப்பதால் !
புல்லிலைப் புல்லாங் குழல்
பொங்கிடும் இசை வெள்ளம் !
ஏனெனில் ஏற்கனவே அது
அனுபவித் துள்ளது
மண்ணும், மழையும், ஒளியும்
கரும்பாய்
உருவாகி இருப்பதை !
இடைவெளி நமக்குள் தூரமானால்
காதல் தாகம்
கசந்து போகும்
காதலி திரும்பி வருவாளா
அல்லது
காணாமல் ஓடி விட்டாளா
என்றோர்
காரணம் அறியாத தால் !
உள்ளிழுக்கப் படுவாய்
புறத்தே நீ
தள்ளி விடும் போது !

+++++++++++++++++++++
சில சமயம் ஏற்படும் மறதி
+++++++++++++++++++++

நினை வின்றிப் போகும்
சில வேளை எனக்கு
துணைவியின் ஐக்கியம் என்பது
என்ன வென்று தெரியாமல் !
உள்ளுணர் வின்றி
தெள்ளறி வின்றி
தெளிக்கிறேன் நான் எங்கும்
என் சோக பாரத்தை !
எனது கதை பல்வேறு வழிகளில்
எங்கும் சொல்லப் படுகிறது :
வாலிபக் காதற் களிப்பாய்
கேலி நகைப்பாய்
ஆணின் போராட் டமாய்
காலி இடமாய்க்
கதைக்கப் படும் !

+++++++++

எந்தன் மறதியை
வகுத்து விடு
எண்ணற்ற இலக்கத்தில் ! அவை
இயங்கிடும்
ஒரு சுற்று வட்டமாய் !
பின்பற்றும் எனது
இருண்டு போன
ஆலோசனைகள் எல்லாம்
தெரியாத ஒன்று
தீட்டிய
ஒரு சதித் திட்டமா ?
கவனம் வைப்பீர்
நண்பரே !
என்னருகில் வர வேண்டாம்
அனுதாபப் பட்டோ
அல்லது
ஆவல் மிகுந்தோ !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 15 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts