கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++
சிறுவரோடு விளையாடும் ஞானி
++++++++++++++

++++++++++++++
விளையாட்டுச் சிறுவனாய் இரு !
++++++++++++++

சிறந்த அறிவைப்
பெறுவதற்கு
உகந்த முறை இதுவல்ல !
அறிவுப் பாரம் சுமப்போர்
குருவின் சீடர்
விரும்பினும் சரி
விரும்பாது போயினும் சரி
வேதனைப் படுவார் !
பொது மக்க ளிடையே
புகழ் பெறத்
தூண்டில் போன்றது அது !
தர்க்கத்துக் குட்படும் அறிவுக்கு
வாடிக்கை யாளர் இல்லை !
ஆத்மாவும் இல்லை அதற்கு !
உறுதியும் ஆற்றலும் படைத்த
விருப்பக் கூட்டத்தில்
ஞானம்
வீழ்ந்திடும் தரையினில்
ஒருவரும்
வரவில்லை என்றால் !
உண்மை யான
வாடிக்கை யாளர் கடவுள்
ஒருவர் தான் !

+++++++++++++

மெதுவாக மென்று தின்பாய்
இனித்திடும் கரும்புத் தண்டை !
அது போல்
கடவுளின் அன்பும்
சுவைக்கும் !
விளையாட்டுச் சிறுவனாய்
நிலைத்திரு !
ஒளி பெறும் உன் முகம் !
சிவப்பு ரோஜா போல்
மலர்ந்திடும் !

++++++++++

அலை மோதும்,
மனநிலை மறந்திடும்,
காதல் மோகி
வெட்கித்
தலை குனியட்டும் !
தெளிவு உள்ளவன்
கவலை அடைவான்
வாழ்க்கை
தாறு மாறாய்ப் போயின் !
காதலனும்
கவலைப் படட்டும் !

+++++++++

இரவு, பகல் எந்நேரமும்
இசை வெள்ளம் !
அமைதி ஒளியில்
பொங்கி
எழும் பாட்டு !
அவை எல்லாம்
மங்கிப் போனால்
அனைவரும்
மாய்ந்து போவோம் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 8 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts