கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -1

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++

++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++

ஒரே காற்றுதான்
வேரோடு மரங்களை வீழ்த்திப்
புல்லின் இலைகளை
வில்லாய் வளைத்து
மின்னிடச் செய்யுது !
தெய்வீகக் காற்று
இலைகளின்
பலவீனத்தை நேசிக்கும் !
பணிவையும் விரும்பும் !
பராக்கிரமம் தன்னிடம் உள்ளதைப்
பீற்றிக் கொள்வ தில்லை
காற்று
ஒரு போதும் !

+++++++++++

வெட்டித் துண்டாக்கும்
கோடரி
கிளைகளின் தடிப்பைக்
கண்டு
கவலைப் படாது !
இலைகளின் விதி வேறு
அவற்றை விட்டு
விலகிச் செல்லும்
கோடரி !
கட்டுமரத்தின் குவியலைக்
கண்டு கொள்ளாது
கனல் பொறி !
ஆட்டு மந்தைக்கு
அஞ்சி
ஓடிப் போக மாட்டான்
கசாப்புக் கடையாளி !

+++++++++++++

மெய்த்து வத்தின்
முற்றத்தில்
வையகத்தின் வடிவென்ன ?
மிக மங்கிய தோற்றம் !
சுற்றிடும் ஒரு
கும்பா போல் வானை
நம்மீது
குப்புறக் கவிழ்த்துவது
மெய்ப்பாடு !
விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 12 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts