கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
++++++++++++++

நடனம் புரிவதற்குத்
தெரு வழியே வரும்
புல்லாங் குழலிசை
நாத வெள்ளம்
நமது செவிப்பட
அதிட்டம் செய்துள்ளோம் !
புவித்தளம் மிளிர்கிறது !
முற்றத்தில்
தயாராக உள்ளது மேஜை !
எல்லா ஒயினையும்
இன்றிரவே அருந்துவோம் ! இதோ
வசந்த காலம்
வந்து விட்டது !
கடல் குமுறி ஏறுகிறது.
முகிலாகி நாங்கள் மிதக்கிறோம்
கடல் வான்மீது !
உள்ளொளி யால் கடலுக்குள்
ஒளி தெரியும் போது
கடுகுபோல் ஆகிவிட்டோம்
கடல் மேல் !
குடி மயக்கத்தில் நான்
கிடப்பது எனக்குத் தெரிகிறது
கடல் பேச்சை நான்
தொடங்கிய போது !
ஒரே வீச்சில்
வெண்ணிலவை
இரண்டாய்ப் பிளக்க
விரும்பு வாயா நீ ?

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 27 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts