கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -5

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
நமது பூமி
++++++++++++++

“நான் நாட்டியம் ஆடவோ, ஊது கொம்பை ஊதவோ, முரசை அடிக்கவோ நீ விரும்பினால், என்னை ஒரு திருமண விருந்துக்கு அழைத்திடு ! இடுகாட்டிலிருந்து என்னை
வெளியே இழுத்துக் கொண்டு வந்திடு !”

கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

+++++++++++++++++++
<< பிரபஞ்சத்தின் மகத்துவம் >>
+++++++++++++++++++

எமது குப்பைக் கழிவுகளை
எல்லாம்
உனது நெஞ்சில் திணிக்கிறோம் !
கதிரடிக்கும் நிலத்தில் கோதுமைப்
பயிர்கள் சேர்ப்பாய் நீ !
கொத்துக் கொத்தாய்த் திராட்சைக்
கொடிகள் வளர்ப்பாய் நீ !
உலோகத் தனிமங்கள்
எடுத்து நாங்கள் செய்வோம்
பல பீரங்கிகள்
வெடி குண்டுகள் ! ஆனால்
எமது தனிமங்களில் நீ
முளைக்கச் செய்வாய்
முல்லையும் ரோஜாவும் !
எத்துணைப் பொறுமை உனக்கு
வையமே !
எத்தகைப் பரிவு உள்ளது
உனக்கு !
கிழக்கு மேற்காய்ப் பிரபஞ் சத்தில்
பயணம் செய்த போது
இறைவன்
பாதத்தால் உண்டான
நீயோர்
அணுத்தூசிக் கோளம் !

+++++++++++

அல்லது தீப்பொறி ஒன்று
நித்திய
உலையி லிருந்து
எறியப் பட்டதா ?
விண்ணைத் தொட்டு விடும்
அண்டக் கிளைகள்
பரப்பிடும் இறைவனின்
மரமாய் வளர
நிலத்தில் போட்ட
நீ ஒரு விதையா ?
அல்லது
பூதங்களின் பூதக் குழல்களில்
ஓடும் இரத்தத்தின்
ஒரு துளியா ?
அல்லது
அவனது நெற்றியில் துளிர்த்த
வேர்வையில் உதித்த
ஓர் முத்தா ?

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 13, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts