கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -19 திறப்பாய் உனது புனை நினைவை

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
திறப்பாய் உனது புனை நினைவை
(Unfold Your Own Myth)
++++++++++++++

பொழுது புலர்ந்ததும்
எழுந்து யார்
பூத்தெழும் ஒளியை நோக்குவார் ?
அணுக்களைப் போல்
வக்கிரமாய்
வட்ட மிட்டுவதை
யாரிங்கு பார்ப்பது ? தாகமுள்ள
நீர்ச்சுனை ஒன்றை
யார் ஒருவர்
நெருங்கிச் சென்று
நிலவு பிரதி பலிப்பதை
நேராகக் காண்பது ?
கவலையில் மூப்படைந்த
கண்ணில்லா ஜேகப்* போல்
மரணமுற்ற மைந்தன் உடை நுகர்ந்து
மறுபடியும்
கண்ணொளி பெற்றது யார் ?
வாளி ஒன்றைக்
கீழிறக்கி ஓடும்
ஞானத் தூதுவரை
மேல் தூக்கி வருவது யார் ?
தீயை நாடிச் சென்ற
மோசஸ்* போல்
பொழுது புலர்ச்சியில்
எழுந்திடும் நெருப்பைக்
கண்டது யார் ?

++++++++++++++++

பகைவரிட மிருந்து
தப்பிக் கொள்ள
இல்லம் ஒன்றில் ஒளிந்து கொண்ட
ஏசு நாதர்
புதியதோர் உலகுக்குக்
கதவு திறந்தார் !
மீனை அறுத்த சாலமன்
பொன் மோதிரம்
ஒன்றைக் கண்டான் !
தூதரைத் தாக்கிக் கொல்லப்
பாய்ந்த ஓமார்*
ஆசிகள் பெற்று
ஏகினான் !
மானை விரட்டிப்
போனவர்
எல்லா இடத்துக்கும்
போவார் !
ஒரு துளிக்கு
வாய் திறக்கும் சிப்பியில்
இப்போது
இருப்பதோர் முத்து !

+++++++++++++

சிதைந்த குவியல்களில்
திசையற்றுத்
திரியும் நாடோடி ஒருவன்
செல்வீகன் ஆவான்
திடீரென்று !
திருப்தி அடையாதீர்
எப்படிப் பிறர் இருந்தார்
என்னும்
இந்தப் புனை கதைகளில் !
உமது புனைவு உணர்வுகளைத்
திறந்து வைப்பீர்
சிக்கலான விளக்க மின்றி
பிறருக்குப் புரியும் படி !
திறந்து வைப்போம் உமக்காக !
மோசடிகள்,
பாசாங்குகள் நோக்கி நடந்தால்
பாரமாகும் கால்கள்
களைப்படைந்து !
ஒருகணம் உனக்கு வந்திடும்
இறக்கை முளைத்துப்
பறப்பதாய் !

++++++++++++++++++

*ஜேகப், *மோசஸ், *சாலமன் பைபிள்
கூறும் நபர்கள்.
*ஓமார் இஸ்லாமிய நபர்.

++++++++++++++++++

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 13 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts