கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++
பூமியின் கூக்குரல்
++++++++++++++

புவித்தளம் போல் உணர்கிறேன்
வியப்புடன் !
எத்துணை அரிய விளைவை
பெற்று வந்துள்ளது
இச்சூழ்வெளி !
எனக்குத் தெரிந்த தெல்லாம்
என்னுள் வளரும் !
ஒவ்வொரு மூலக்கூறையும்
மழைப் பொழிவு
கர்ப்பம் ஆக்கும்
மர்மத்தை நிரப்பி !
பிள்ளைப் பேறு வலியில்
தாயுடன் அலறுவோம்
நாமெல்லாம் !
பூமியும் அலறு கிறது :
“நான்தான் சத்தியம் !
கீர்த்தி இங்குள்ளது !”

++++++++++++++++

திறக்கிறது பூமி ! அதிலிருந்து
பிறக்கிறது ஓர் ஒட்டகம் !
மரம் ஒடிந்து
கிளை ஒன்று விழுகிறது !
அங்கே ஒரு பாம்பு !
நபி நாயகம் நவில்கிறார் :
“மெய்யான
நம்பிக்கை கொண்டவன்
நல்லதோர் ஒட்டகம் போன்றவன் !
தன்னை ஒழுங்காய்ப் பேணும்
எஜமா னனை மட்டும்
எதிர்நோக்கும் அது
எப்போதும் !
வைக்கோல் இடுவான் அவன் !
முழங்காலைக்
கட்டிப் போடுவது
தாங்கிக் கொள்ளும் சட்டம் !
கட்டுப்பாடு நீக்கிய பின்
ஒட்டகம்
நடனம் ஆட விடப்படும்
அங்கியைக் கிழித்துக் கொண்டு
கடிவா ளத்தை
அறுத்துக் கொண்டு !

+++++++++++++

புதிய வடிவத்தில் தளிர்க்கும்
பயிரினம்
பூமியின் தளத்தில் !
கற்பனை செய்யாத
அற்புதச் செடிகள் முளைக்கும் !
நடனமிடும் ஒட்டகம்
அவை மேல் !
இந்தப் புதிய விதைகள் எல்லாம்
என்னதான் முயன்றாலும்
வேறோர் பரிதியை
விளக்கமாய்க் காட்டுவ தில்லை !
அவை மறைக்கும் அதனை !
ஆயினும்
முயற்சி அளிக்கும் மகிழ்ச்சி
சிப்பிக்குள் இருக்கும்
முத்துக்களை
ஒவ்வொன்றாய் வெளியே
எடுக்கும் போது !

++++++++++++++++++

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 6 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts