கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நீராவிப் புகை இழைகள் கவிதை -17 பாகம் -2

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++
நீராவிப் புகை இழைகள்
+++++++++++++++++++

நிரப்பிடும் குளிக்கும் இடத்தை
நீராவி !
விழித்திடும் சுவரில் உறைந்த
துளிகள் !
திறக்கும் ஈரக் கண்கள்
வட்டமாய் !
சுயக் காதல் விழிகள்
நோக்கும் வெகு தூரம் !
புதுச் செவிகள்
எக்கதையும் கேட்க விழையும் !
நண்பரைப் போல்
வடிவங்கள் எல்லாம்
நடனங்கள் ஆடும் நீரில்
ஆழமாய் பாய்ந்தும்
மேல் எழுந்தும்
மீண்டும் குதித்தும் !

++++++++++++++++

முற்றத்தில் நீராவி கசியும்
மறுபடி கேட்கும் அதன் அரவம் !
ஒரு மூலையில் துவங்கி
ஓடும் அடுத்த மூலைக்கு
சிரித்த வண்ணம்
நீராவி !
எவரும் கூர்ந்து நோக்கார்
எவ்விதம் நீராவி
ஒவ்வோர் மனத்தின் ரோஜாவைத்
திறக்கிற தென்று !
பிச்சைக் குவளையை
எப்படி நாண யங்களால்
நிரப்பிக் கொள்வது ?
நீண்ட கூடை ஒன்று
நிரம்பிடும் நன்கு உடனே
நீர் விழைவது போல !

+++++++++++++

நீதி வழங்கும் நெறியாளரும்
தவறு செய்த மானிடரும்
தீர்ப்பை மறந்து
சென்றிடுவார் !
ஒருவர் எழுந்து நிற்பார்
உரையாற்ற !
எதிரே இருக்கும்
மரமேஜை புனிதம் அடையும் !
அவ்விநாடி மதுக்கடை
ஆக்கப் படும் ஒயினால் !
மதுவைக் குடிப்பான்
மயக் கத்தில் மாய்ந்தவன் !

++++++++++++++++++

அடுத்து நீராவி
ஆவி யாக மறையும் !
வடிவங்கள்
சுவரில் பதிந்து கொள்ளும்
வெறுமை ஆயின விழிகள்
நேர் கோடாகும் செவிகள் !
வெளிப்புறத்
திரையில் நிகழும் அக்காட்சி !
பறவையின் குரலும்
சருகுகள் சலசலப்பும் கேட்கும்
தோட்டத்தில் !
எழுந்து நிற்போம் இந்த சத்தத்தில்,
காற்றாய் மாறுவோம் !
என்ன நடக்குமென
எவர் சொல்ல இயலும்
எல்லாரும் பேனாவை
கோடி முறை மைச்சிமிழில்
நாடி விடும் போது ?

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 30, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts