கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -17 நீராவிப் புகை இழைகள்

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++
நீராவிப் புகை இழைகள்
+++++++++++++++++++

மீண்டும் ஒளியை ஏற்றுவாய்
ஒளியூட்டும் ஒன்றிலே !
வாழும் வழியை மாற்றுவாய் !
கடல் கொப்பரையில் நீ
எடுக்கும்
ஒவ்வொரு குவளை
ஒயினும்
நெருப்பைப் பற்ற வைக்கும் !
நெடுங்காலத் துக்கு முன்
செத்துப் போன
ஓரிரண்டு உடல்களும்
உயிர்த்தெழும் !
ஓரிரண்டு குடிகாரர்
சிங்க வேட்டைக் காரர்
ஆவார் !

++++++++++++++++

கறுப்பு முகத்தை வெளுப்பாக்கும்
கதிரவன் ஒளி !
மெய்யான மலர் ஒன்று
மிளிர்ந்திடும் அந்த முகத்தில் !
புல்வெளிகளும்
பூந்தோட்டமும் ஈரமாகும்
மீண்டும் !
வீரிய ஒளி போன்ற
விரல்கள்
எமது தலையை
நளினமாய்த் தடவின !
பிரிவினை எதுவும் இல்லை
விரல்களுக் குள்ளே !

+++++++++++++

பூட்டுத் தாழ்ப்பாளை நகர்த்து !
மேலிருந்து ஓர் அடுக்கு
கீழடுக்கை நோக்கி விழும் !
வெப்பம் பரவிடும் எப்புறமும் !
வெறி கொண்ட
கொப்பரைகள் கொதிக்கும் !
கிழிந்திடும் உடைகள் காற்றினில் !
வெளி விடுவார்
வெகுண்ட கவிஞர்
நீராவிப் புகை இழைகள் !
களிப்புக் கோர் அளவில்லை
ஒளிவெளியில் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 23, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts