கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++
நமது பூமி
++++++++++++++++++++++++++

கவிதை -33 பாகம் -1

மகள் ஒருத்தி தாயின் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற மறுத்தால், அந்தத் தாய் சொல்வாள் : “தாயை விடத் தாழ்ந்து போனவள் மகள். தாயின் தடத்தில் நடக்க வேண்டும்
புதல்வி.”

கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)

++++++++++++++++++++++++++
<< புவியே என்னே உன் எழில் ! >>
++++++++++++++++++++++++++

எத்தகை எழிலுடன் உள்ளாய்
புவியே நீ !
எத்தகைப் பெருமிதம் உனக்கு !
எத்தகை பூரணப்
பணிவு மனம் உனக்கு
பரவும் ஒளி மீது !
எத்தகை நேர்மைத் தணிவு
இரவி மீது உனக்கு !
எத்தகை வனப்போடு உள்ளாய்
நிழலில் மூடி !
எத்தகைக் கவர்ச்சி உள்ளது முகத்தில்
மர்மத்தைக்
கவசமாய்க் கொண்டு !

+++++++++++

எத்தகை மன அமைதி அளிக்கும்
புலரும் காலைப் பொழுது
புனையும் கீதம் !
எத்தகைக் கடூர மானவை
உனது புகழ்ச்சிகள் !
எத்தகை பூரணம் உனக்குப்
புவியே !
எத்தகைக் கம்பீரம் உனக்கு !
உனது சமவெளி களின் மேல்
உலவி வந்துளேன் !
உனது மலைச் சிகரங்களில் ஏறி
ஊர்ந்தி ருக்கிறேன் !
உன் பள்ளத் தாக்குகளில்
இறங்கி வந்துளேன் !
உனது குகைகளின்
ஊடே நுழைந் திருக்கிறேன் !

++++++++++++

உனது கனவுகளைக் கண்டேன்
நினது சமவெளிகளில் !
உனது பெருமிதம் கண்டேன்
நினது மலைகளில் !
உனது பேரமைதிக்குச் சான்றானேன்
நினது பள்ளத் தாக்குகளில் !
உனது தீர்மானம் நிறைவேறும்
நினது குன்றுகளில் !
உனது மர்மங்கள் ஒளிந்திருக்கும்
நினது குகைகளில் !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 16, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts