கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -1

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++
உன் முகத்தை நோக்கும் போது
++++++++++++++++++++++++++++++

நான் உன்முகம் நோக்கும் போது
கற்சிலைகள் தலைசுற்றும்
தோன்றுவது நீ !
நான் கற்ற தெல்லாம்
குழம்பிப் போகும் !
இழப்பது நான்
என் இருப்பிடம் !
முத்துக்களாய் மாறும் நீர்த் துளிகள்
செத்திடும் நெருப்பு ! அது
சிதைப்ப தில்லை எதையும் !
உன் முன்னிலையில்
எனக்கு விருப்ப மான
அம்மூன்று தொங்கு
விளக்கு களையும் நான்
வேண்டேன் !
உன் முகத்தின் உட்புறத்தில்`
புராதன எழுத்தேடுகள்
துருப்பிடித்த கண்ணடி போல்
இருக்கின்றன` !

+++++++++++

காற்றை நீ சுவாசிப்பதால்
புதுப் புதுத்
தோற்றங்கள் உருவாகும் !
ஆசைகள் யாவும்
கீதங்களாய்
வசந்த காலம் ஊர்வது போல்
பயணி செய்யும்
ஒரு பெரும்
வாகனம் போல் !
கவனமாய், மெதுவாய் ஓட்டிச் செல்
வழிப் பயணிகளில் சிலர்
கால் முடவர் !

++++++++++++++

இன்றைக்கு விழித்து எழுந்தோம்
என்றும் போல்
வெறுங் கையாய்
ஒன்று மில்லாது
பயத்தோடு !
படிப்பறையின்
கதவைத் திறவாதே !
எதையும் படிக்கத் துவங்காதே !
இசைக் கருவி ஒன்றை
எடுப்பாய் !
நாம் வழிபடும் அழகுத்துவம்
நமது பணிகளில் புலப்படட்டும் !
நூற்றுக் கணக்கான
தோற்ற முறையில்
துதிக்கலாம் நாமெல்லாம்
மண்டி யிட்டு
மண்ணை முத்த மிட்டு !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 27, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts