தேக்கம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

இர. சங்கர பிரசாத்



இன்று.
இன்றா?
இன்றுதான், ஆம்,
இது இன்று, நேற்று இல்லை, இன்று.
ஆ…னா….ல்
நேற்று, நேற்று முன் தினம்…
கொஞ்சம் இரு —
எண்ணிப் பார்த்தால்
கடந்த எல்லா தினங்களும்
போலத்தான் இன்றும்
அதே அதேவாய்…
நேற்றின் மங்கிய நகல்களாய் இன்றுகள்
இருக்கட்டும்.
நாளை?
ஓ, நாளையும்
இன்று போல்
இன்றே போல்
ஒரு நேற்றுதானோ?

Series Navigation

Similar Posts