கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++
இறைவன் உன்னோடு உள்ளான்
++++++++++++++++++++++++++++++

என் இனிய காதலி !
இந்த மர்மத்தை விளக்கும்
எனக்கோர் நிகழ்ச்சியைச் சொல்
இப்போது !
எப்படிச் சுதந்திர மாய் நாம்
இயங்கி வந்தோம் !
ஆயினும் நாம்
வலிந்து செயற் பட்டோம் !
முடக்கு வாதத்தில் ஒரு கரம்
நடுங்கிடும் !
ஆடிடும் மறு கரம்
அதனைத் தடுக்க முனையும்
தருணத்தில் !

+++++++++++

நரம்பு நடுக்கம்
இரண்டும்
இறைவனால் வந்திடும் !
ஆனால் உனக்குள்ளது
ஒன்றின் மேல் குற்ற உணர்வு !
ஆனால்
அடுத்த கரம் பற்றி நீ
விடுப்ப தென்ன ?
இவை ஞான வினாக்கள் :
ஆன்மா நெருங்கும் அவற்றை
வேறு முறையில் !
ஓமாரின் விஞ்ஞான நண்பன்
பூல்-ஹாக்கம்*
எளிய பிரச்சனைகள் தீர்வுகளில்
இருப்பார் நிபுணராய் !
ஆனால் ஓமாரை
ஞான ஒளிச் சிந்தனையில்
வியந்து
காண முடிவதில்லை விஞ்ஞானி !
புத்தகத் துக்கு மீள்கிறேன்
இப்போது.
இறைவன் உன்னோடு உள்ளான்
எங்கு நீ இருப்பினும் !
ஆனாலும்
நான் எப்போ தவனை விட்டு
நழுவிச் சென்றேன் ?

++++++++++++

அறிவின்மை என்பது
இறைவன் சிறைக் கோட்டை !
அறிவுப் புலமை
இறைவனின் மாளிகை ! நாம்
உறங்கிக் கிடப்பது
இறைவன் மெய்மறந்த நிலையில் !
விழித்தெழுவது நாம்
இறைவன் திறந்த கரங்களில் ! நாம்
அழுது கொண்டிருப்பது
இறைவன்
மழை பொழியும் போது !
புன்னகை செய்வது நம் இறைவன்
மின்னல் வெடிகளில் !
நமக்குள்
சண்டை யிடுவதும் நாம்
சமாதானம் செய்வதும்
கடவுளின் உள்ளே தான்
நடக்கின்றன !

+++++++++++++++

அப்படி யாயின்
இப்படிப் பல்வேறு சிக்கல்கள்
பின்னிய உலகில்
நாமெல்லாம் யார் சொல்வீர் ?
ஆதி காலத்தில்
மெய்ப்பாடு நேர்மைக் கோடாகத்
தோன்றியவர்
அல்லாஹ் இறைவன் !
நாமெல்லாம் வெறும்
காலிப் பாத்திரம் !
சூனியம் !

*****************
பூல்-ஹாக்கம்* (Scientist Bu’l-Hakam)

*****************

(தொடரும்)

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 21, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts