கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் – ஊழ்விதி கவிதை -30 பாகம் -1

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++++++++++++++++++++++
ஊழ்விதி
+++++++++++++++++++++++++++++++++

கவிதை -30 பாகம் -1

முந்திய காலத்து மாமேதைகளை விட உயர்ந்திருக்கும் மிக்கப் பணிவு கொண்ட மனிதர் வாழும் யுகத்தில் நாம் வசித்து வருகிறோம். நம் மனதில் முன்பு குடிகொண்டிருந்தவை இப்போது பொருளற்றுப் போயின ! அவை மக்களின் கண்ணோட்டமின்றி மூடி வைக்கப் பட்டன ! நமது உள்ளுணர்வுகளில் ஒரு காலத்தில் மிதந்த மூடுபனிபோல் அவை கலைந்து போய்விட்டன ! அந்த இடத்தில் புயல் போல் மாமேதைகள் புகுந்து கடல் போல் கொந்தளித்து,, எரிமலைகள் போல் மூச்சு விட்டு நகர்ந்து செல்கிறார் !

கலில் கிப்ரான். (The Giants)

++++++++++++++++++++++++
<< ஊழ்விதி >>
++++++++++++++++++++++++

போரட் டத்தின் முடிவிலே
எவ்வித மான
ஊழ்விதியை முந்தைய மாமேதைகள்
உலகுக்கு அறிவிப்பார் ?
செத்தவரின் எலும்புகளை
மரணம்
விதைத்துள்ள தனது வயலுக்குக்
குடியானவன் வித்திட
மீள்வானா ?
வாள்கள் அறுத்து விட்ட
வனத்தின்
பசும்புல் தளங்களில்
ஆட்டிடையன் தன் மந்தை
ஆடுகளை
மேய விடுவானா ?
குருதி கரைப் பட்டக்
குளத்து ஊற்று களிலே
ஆடுகள் நீர்
குடிக்குமா ?

+++++++++

சாத்தான்கள் கூத்தாடிப்
புனிதமற்று போன பீடத்துப் கோயிலில்
ஆத்திகர் மண்டி யிட்டு
ஆராதிக் கவும் வருவரோ ?
பீரங்கிப் புகை மறைத்த
தூர விண்மீன் களுக்கு அடியிலே
பாவலர் தம் பாடல்களைப்
படைத் திடவும் செய்வரோ ?
மௌனத்தைக் கலைக்கும்
இரவிலே மூர்க்கரின்
குரலிலே
இசைப் பாடகன் தனது
நாதக் கருவி
நாண்களை மீட்டுவனோ ?

++++++++++++

நாளை வரும் தீங்கெண்ணி
நைந்து போகையில்
தாயானவள்,
தொட்டில் குழந்தைக்குத்
தாலாட்டுப் பாடவும் இயலுமோ ?
போர்க் களத்தில்
குண்டுகள் வெடித்து
புகை மூட்டம் இன்னும்
மண்டிய போது
காதலர்கள் சந்தித்து
மோக முத்தம் இடுவரோ ?
புண்ணை ஆற்றிப்
புவிக் காயத்தைத்
தன் ஆடையில் கட்டி விட
ஏப்ரல் மாதமும் மீளுமோ
இந்த பூமிக்கு ?

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 14, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts