சுவடு

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

ப.மதியழகன்


கடற்கரையில் நண்பகலில்
யாரிருப்பார்கள்
கிளிஞ்சல்கள் பொறுக்கும்
சிறுவர்களும்
லீலைகளில் ஈடுபடும்
காதலர்களும் தவிர
கடலுக்கு இது மற்றுமொரு நாள்
அவ்வளவே
என்றைக்கு அவை
ஆழிப்பேரலையாகும்
யாருக்குத் தெரியும்
பிரளயத்தின் சுவடு
தெரியாமல்
சகஜமாக இருக்கிறது கடற்கரை
ஆழ்கடலில் மீன்பிடிக்கும்
மீனவர்களும்
வாழ்வெனும் சாம்பல் மேட்டில்
புதையலைத் தேடும்
வெகு ஜனங்களும்
சுவடே இல்லை
சுனாமி தாக்கிய
சுவடே இல்லை
நாளையும் மற்றுமொரு இன்றே
நாளையாவது நல்விடியலாகட்டும்
வெறுமைக் கனவுகள்
தகர்ந்து ஒழியட்டும்.

Series Navigation

author

ப.மதியழகன்

ப.மதியழகன்

Similar Posts