கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11 – பாகம் -3

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



++++++++++++++++++++++++++++++
பொறுமையின் பெருமை
++++++++++++++++++++++++++++++

பிற வழிகள் மூலமாய் எழும்
உடலின் இச்சைகள்
அறிவிக்காது
நெருக்கிடும் தொடர்புகள் !
பொறுமை யாய்
இருக்க வேண்டும் அவற்றுடன் !
உறவுகள் உதவலாம்;
எனெனில்
அமைதியும் அன்பும் பற்றிடப்
பொறுமை கொள்ளும்
திறமையே நீடிக்கும்.

+++++++++++

ரோஜா இதழ்கள் முள்ளுக்கு
அருகிலே
இருப்ப தால்தான் அதன்
நறு மணத்தைப்
பொறுமை
காத்து நிற்கிறது !
மூன்றாண்டு கழிந்த பின்னும்
ஆண் குட்டிக்குப்
பால் அமுது அளிக்கும்
தாய் ஒட்ட கத்தின்
பொறுமை !
தேவ தூதர் நமக்குப்
போதிப்பதும்
பொறுமை ஒன்றுதான் !

+++++++++

பொறுமை என்பது
கவன மாக
வெகு நளின மாகக்
நெசவு செய்யப் பட்டுள்ளது
அணியும் ஆடையில் !
புனித நட்பும், மனிதப் பற்றும்
பொறுமை யுள்ளவை !
உறுதி அளிக்கும்
பந்தப் பிணைப் புக்கு !
தனிமை உணர்ச்சியும்
தாழ்மை எண்ணமும்
பொறுமை இன்மையைப்
புலப்படுத்தும் !

++++++++++++

கடவுளை நம்புவோர் சூழ்ந்திட
உடனி ருப்பாய்
தேனோடு கலக்கும்
பால் போல !
போவதும் வருவதும்
போல,
ஏறியும் படிவதும் போல
மாறுபவை
எனது விருப் புக்கு
மாறானவை !
தேவ தூதரைப் படைத்த
தேசத்தில் வாழ்வீர் !
இன்றேல்
பாலை வனப் பயணத்தில்
பாதை ஓரத்தில்
தனித்து எரிந்தணையும்
தீ போல்
நீ இருப்பாய் !

*****************

(தொடரும்)
***************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 7, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts