கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -1

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“பைத்தியம் என்று சொல்லும் அளவுக்கு மீறி வெறி கொண்டவர் அவர். அவர் ஒரு பூரணவாதி (Idealist) ஆன போதிலும் அவரது இலக்கியக் குறிக்கோள் வாலிப இதயங்களில் நஞ்சிட்டுப் பாழாக்குவதே ! திருமணம் பற்றி மனிதரும், மாதரும் கிப்ரான் ஆலோசனைகளைப் பின்பற்றினால் இல்வாழ்வுப் பந்தம் முறிந்துவிடும் ! சமூகம் அழிந்துவிடும் ! அசுரரும் பிசாசுகளும் குடிமக்களாய்க் கொண்ட அக்கினி மயமாய் ஆகிவிடும் !”

இப்படித்தான் என்னைப் பற்றி மக்கள் கூறுகிறார். அவர் உரைப்பது சரியே !

கலில் கிப்ரான். (Narcotics & Dissecting Knives)

+++++++++++++++++++++++++++++++
<< என் படைப்புகள் >>
+++++++++++++++++++++++++++++++

கிழக்காசிய மக்கள் வேண்டுவது
எழுத்தாளன்
தேனைத் தயாரிக்கும்
ஒரு தேனீ போல்
இருக்க வேண்டும் என்று !
தேன் அவருக்குப்
பெருந் தீனி !
மற்றனைத்து உண்டியை விட
தேனே அவருக்குத்
தேவை உணவு !

++++++++++++++

கிழக்காசிய மக்கள் விழைவது :
ஊது பத்தி
புகைவது போல்
அவரது கவிஞனும்
எரிந்திட வேண்டும்
அரசாளும்
அவரது சுல்தான் முன்பு !
கிழக்காசிய வான மெல்லாம்
புகை மூண்டு
நோயுற் றாலும் மக்கள்
ஓய்வ டையார்
ஊது பத்திப் புகைச்சல்
போது மென்று !

+++++++++++++++

உலகம் அதன் வரலாற்றை
உருவாக்க வேண்டும் !
பூர்வீகத்தை,
பழைய வழக்கத்தை
சம்பிர தாயத்தைப்
பயின்று
மொழி ஆளுமையைக்
மேற்கொள்ள வேண்டும் என்று
வேண்டிக் கொள்வார் !
கிழக்காசிய மக்கள்
பழங்கதையை நியாயப் படுத்தி
சுக மெத்தையில்
படுத்திருக் கிறார் !
நேரிய நினைப் பையும்
நிலைத்த அறிவுரை களையும்
மெய்ப்பாடு
ஞானத்தையும் புறக்கணிப்பது
ஏனெனில்
உள்ளத்தைக் குத்தும் அவை !
உறக்கத் தின்று
எழுப்பி விடும் அவை !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 25, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts