கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -2

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“உங்கள் ஆத்மா தேர்ந்தெடுத்த ஒரு பெண்ணைச் சந்திக்க உங்களில் யார் தூரமாகத் திரைகடல் ஓடிப் பயணம் செய்யாதவர், பாலைவனத்தைக் கடக்காதவர், எல்லாவற்றுக்கும் உயர்ந்த மலைச் சிகரத்துக்கு ஏறிச் செல்லாதவர் ?”

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++
<< ஆலயத்தின் வாசலில் >>
+++++++++++++++++++++++++++++++

என் ஆத்மாவைப் பற்றும்
மறைந்துள்ள
அந்த முரட்டு மென் கரங்கள்
யாருடைவை ?
என்னிதயத்தில் நிரம்பி வழியும்
கசப்புள்ள களிப்பும்
இனிப்புள்ள வலியும்
கலந்திருக்கும்
ஒயின் மதுபானம் எது ?
உறக்கத்தைக் கலைத்து
இரவின் அமைதியில்
என் தலையணை மேல் சுற்றும்
பறவையின்
இறக்கைகள் யாவை ?

++++++++++++++

அறிந்து கொள்ள முடியாது
சிந்திக்க வைத்து
அளவுக்கு மிஞ்சிய
உணர்ச்சியில்
வெறித்து நான் நோக்கிடும்
கண்காணா
அந்த மாயப் பொருள் யாது ?
எந்தன் பெரு மூச்சில்
இருப்பது துயரம் !
எழில் மயமாகும் அது
புன்னகையின் எதிரொலியாய் !
பூரிப்பை விட அது
பொலிவானது !

+++++++++++++++

என்னைக் கொன்ற பின்பு
காலை விடிவு வரை
என்னை உயிர்த்திட வைத்து
என் இல்லத்தை
ஒளிமயத்தால் நிரப்பும்
காணாத ஓர் வல்லமைக்கு
நான் ஏன் சரண் அடைவேன் ?
காதலென்று நாம் சொல்வது
யாதென்று தெரியுமா ?
யுக யுகமாய்
நமது உள்ளுணர்வில்
புகுந்து கொண்டு
மறைந் திருக்கும் அந்த
மர்மம் என்ன ?

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts