கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


+++++++++++++++++++++++++++++
ஓளியும், நிழலும்
++++++++++++++++++++++++++++++

உலகத்தின் ஒரு பகுதி
உலகை விட்டு
எப்படி
விலகிச் செல்லும் ?
நீரை விட்டு
நீர்மை எவ்விதம்
நீங்கும் ?
தீயை மென்மேலும் ஏவி
தீயை அணைக்க
முயலாதே !
காயத்தைக் கழுவக்
குருதிச்
சாயத்தை ஊற்றாதே !

+++++++++++++

எத்தனை விரைவாய் நீ
ஓடிச் சென்றாலும்
அத்தனை வேகத்தில்
உன்னைத் தொடரும்
உன் நிழலும் !
நிழல் முன்னே செல்லும்
சில சமயம் !
உச்சி வேளைச்
சூரியன்
நிழல் வடிவைச்
சிறிய தாக்கி விடும்
நிச்சயம் !

++++++++++++

உனக்குப் பணி புரியும்
அந்த நிழல் !
உன்னைக் காயப் படுத்தும்
ஒன்று
உனக்கு ஆசிகள் வழங்கிக்
கண்காணிக்கும் !
இருளே உனக்கு
எரியும் மெழுகு வர்த்தி !
வரையறை
வட்டங் களே நீ
தீர்க்கப் போகும்
மர்ம வினாக் களுக்கு
விடைதேடும்
கர்மக் கோடுகள் !

++++++++++

விளக்கம் தர முடியும்
இதற்கு !
ஆயினும் அது
உன் இதயத்தின்
கண்ணாடிக் கவசத்தை
உடைத்து விடும் !
பிறகு அதைப்
பிணைப்பது சிரமம் !
நிழலும் தேவை
உனக்கு !
ஒளியும் வேண்டும்
உனக்கு !

(தொடரும்)

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 20, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts