கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -2

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நாணல் புல்லாங் குழல் கீதம்

அந்தரங்க உறவுக்கு இச்சையும்
அந்தரங்க உறவும்
ஒரே கீதத்தில் எழும் !
அவல முற்ற
சரண் அடைவும்
அரிய காதலும் உண்டாகும்
ஒருங்கே ! அதை
இரகசிய மாய்க் கேட்கும்
ஒருவன்
அறிவில் லாதவன் !
ஒரு நாக்குக்கு
வாடிக்கை யாய்க் கிடைப்பது
ஒரு செவிதான் !
கரும்புப் புல்லாங் குழலுக்கு
வருவதும்
அவ்விதப் பலனே !
காரணம்
சாரின் சுத்திகரிப்புக் களத்தில்
சர்க்கரை கிடைக்கும் !
புல்லாங் குழலில் எழும்
சங்கீதம்
எல்லோ ருக்கும் !

+++++++++++

நாட்கள் கடந்து செல்லட்டும்
நாம் தவிர்க்க இயலாத்
துயரின்றி !
புல்லாங் குழல் இசையின்
உல்லாசப் பாடலில்
ஊறிக் கிடப்பாய் !
ஒவ்வொரு தாகமும்
நிறை வேற்றப் படும் !
பரந்த நளினக் கடலில்
விரைந்து வரும்
விந்தை மீன்களுக்கு
நீர் மீதிருக்கும் நேசம்
தீராது !
கடலருகில் வாழ்வரோ அங்கே
உடல் வளர்க்க
முடியாது போனால் ?
புல்லிலைப்
புல்லாங் குழலிசை கேட்க
உல்லாசம்
இல்லாது போனால்
உளறுவதை நிறுத்தி விட்டு
விலகிச் செல் நீ
விடை பெற்று !

+++++++++++

(தொடரும்)

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 13, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts