கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27

This entry is part [part not set] of 28 in the series 20100418_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நித்தியமான நேசத்தைத் தவிர
மற்றொன்றை மனம்
பற்றிக் கொள்வ தில்லை !
காரணம்
நித்தியம் போலிருப்பது
நேயமே !

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++
<< இடிக்கப்பட்ட ஆலயங்கள் >>
+++++++++++++++++++++++++++++++

உனக்கு நான் கட்டி
முடித்த ஆலயங்களை எல்லாம்
இடித்துப் போட்ட
தகர்ப்பு மிச்சங்கள் இவை
எனதருமைக் காதலி !
உனது உல்லாச வாழ்வுக்கு
நான் அமைத்த
செல்வ மாளிகையின்
சிதைந்த செங்கற்கள் இவை !
எளியவரைக்
இறுக்கிப் பிழிந்து
ஆடம்பர வாழ்க்கைக் கென்னை
அர்ப்பணித்து
உயர்ந்த பெரு நாட்டுக்கு
எடுத்துச் சொல்ல
எதுவும்
காணப் படவில்லை !

++++++++++++++

எனது நகரைக் கைப்பற்ற
உதவி செய்த
போர் யந்திரங் களை எண்ணி
ஆழ்ந்து சிந்தனை செய்
அருமைக் கண்மணி !
எனது வாழ்வுப் பணி எல்லாம்
வீணடித்த
காலத்தைச் சிந்தித்துக்
கருத்தில் வை கண்மணி !
நான் ஏற்படுத்திய
மாபெரும் சாம் ராஜியத்தை
கால மறதி
மூழ்க்கி விட்டது கண்மணி !
உனது அருங் காதல்
ஆக்கிய
அணுக்களைத் தவிர
அனைத்தும்
சிதைந்து விட்டன கண்மணி !
ஆயினும் உனது
அழகத்துவ நல்வினைகள் யாவும்
பிழைத்துக் கொண்டன !

+++++++++++++++

ஜெருசலத்தில் நான்
உருவாக்கினேன் ஓர் ஆலயத்தை !
குருக்கள் கோயிலைப்
புனிதப் படுத்தினர் !
ஆயினும்
அதனை அழித்தது காலம் !
ஆனால்
காதலுக்கு நான்
கட்டிய
என்னிதய பீடத்தைக்
காத்தது கடவுள்
அழிவின் ஆற்றல்கள் அதைச்
சிதைக்காமல்
நீடிக்க வைத்து !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 13, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts