ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நாணல் புல்லாங் குழல் கீதம்
பிரிவைப் பற்றி
புல்லின் இலைகள் சொல்லும்
புனைகதை கேளீர் !
“மண்தரை மேலிருந்து என்னைத்
துண்டித்த வேளை முதல்
இந்த அழுகுரல் எழுப்பினேன் !
நேசிப் பவரை விட்டுப்
பிரிவுத் துயர் உற்றோர்
புரிந்து கொள்வர் நான்
உரைப்பதை !
தம்மிடத்தி லிருந்து கட்டாயம்
கடத்தப் படுவோர்
தாகம் கொள்வார் மீண்டும்
தடம் வைக்க !
+++++++++++
எந்தக் கூட்டத்திலும் நான் போய்ப்
பங்கெடுக் கிறேன்
பந்த பாசமாய்ப் பழகிப்
பரவசமாய் ஈடுபட்டு !
தோழனாய் உள்ளேன் நான்
ஒவ்வொரு வனுக்கும் !
ஆயினும்
அவரின் குறிப்பு இரகசியம்
அறிபவர் மிகச் சிலரே !
செவிகள் இல்லை அதற்கு.
உடம்பி லிருந்து
உந்திச் செல்லும் ஆன்மா !
உடலுக்கு
ஒளியேற்றி வைக்கும் ஆன்மா !
காணப் படாது
கலந்தி ருக்கும் ஆன்மா !
ஆத்மாவைக் காணும்
ஆற்றல்
அற்ப விழிகட்கு இல்லை !
+++++++++++
புல்லிலைப் புல்லாங் குழலிசை
வெறும் காற்றில்லை.
நெருப்பு அது !
காலி யாக இருக்கட்டும் !
காதல் தீயானது
புல்லிலைக்
கீதத்தில் பின்னித்
தூண்டப் படுவதைக் கேள் !
குழப்பமே ஒயின்
குடி போதையில் தள்ளும் !
புல்லிலைப்
புல்லாங் குழல் ஒரு தோழன்
ஆடைத் துணி
கிழிந்து போய் எறிவதை
விரும்பு வோர்க்கு !
நாணல் இலைகள் புண்பட்டுப்
பாதம் பணியும்
அடிமைகள் போல் !
அந்தரங்க உறவுக்கு இச்சையும்
அந்தரங்க உறவும்
ஒரே கீதத்தில் எழும் !
(தொடரும்)
*****************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 6, 2010)
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -12
- இங்கு எல்லாம்
- வானமெங்கும் வஞ்சியின் வடிவம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிஞரும் கவிதைகளும் கவிதை -26
- அகதிப் பட்சி
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -1
- உலகப் பெரும் விரைவாக்கி செர்ன் ஒரு கால யந்திரம் -6
- திருமங்கையின் மடல்
- முல்லைப்பாட்டென்னும் நெஞ்சாற்றுப்படை
- பரதக் கலையின் வெளிநாட்டுக் காதலிகள்
- மகளிர் விழா அழைப்பிதழ்
- சாவை துணைக்கழைத்தல்
- அப்பாவின் கண்கள் நனைந்திருந்தன
- வெளிச்சப்புள்ளி
- உடலழகன் போட்டி
- அவள் சாமான்யள் அல்ல
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஆறு
- முள்பாதை 24
- 27 வருட போர் : முகலாய பேரரசை வீழ்த்திய ராணி தாராபாயின் மராத்திய தலைமை
- நினைவுகளின் சுவட்டில் – (45)
- மரணம் நிகழ்ந்த வீடு…
- மீன்கதை
- வேத வனம் -விருட்சம் 80
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -9
- முள்பாதை 25