கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிஞரும் கவிதைகளும் கவிதை -26

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



“என் சகோதரக் கவிஞர்கள் எழுத்து வரி அடிகளுக்கு வலு ஊட்டிக் கவிதை ஆரங்களைப் பின்னக் கற்பனை செய்திருந்தால், ஒருநாள் (வெறுப்படைந்து) அவர்கள் கடிவாளத்தைப் பின்னுக்கு இழுத்து தமது கைப் பிரதிகளைக் கிழித்துப் போட்டிருப்பார்.”

“தீர்க்க தரிசி அல்-முதாநபி (Al-Multanabbi) முன்னறிவிப்பு செய்திருக்கிறார் : புகழ் பெற்ற அரபிக் கவிஞர் அல்-·பாரித் (Al-Farid) எழுதிய அனைத்தும் தற்காலக் கற்றுக் குட்டி கவிஞருக்கு கட்டாயக் கைநூல் மூலமாக உதவி செய்யும். கவிஞர்கள் மையை வீணாக்கிக் கவனக் குறையால் மறதியில் எழுதித் தள்ளி மயிலிறகுக் கோலை உடைத்திருப்பார்.”

கலில் கிப்ரான்.

+++++++++++++++++++++++++++++++

<< கவிஞரும் கவிதைகளும் >>

+++++++++++++++++++++++++++++++

கவிதை என்ப தொரு

புன்முறுவலின்

புனித மீள் பிறப்பு

என்னினிய தோழர்காள் !

கண்ணீரை

உலர வைப்பது கவிதை

ஒரு பெருமூச்சில் !

ஆத்மாவில் வீற்றி ருக்கும் ஓர்

ஆன்மாவே கவிதை !

இதயத்தை ஊட்டி வளர்ப்பதே

கவிதை !

இரக்கம் அதற்கோர்

மதுபானம் !

இவ்விதம் படைக்கப் படாதது

உண்மை யற்ற

ஒரு தூதுச் செய்தியே !

++++++++++++++

நித்திய வானுலகி லிருந்து

கண்காணிக்கும்

கவிஞரின் ஆன்மாக்களே !

முத்து முத்தான உமது

சொற்களால்,

ஆத்மாவின் வைரக் கற்களால்

நீங்கள் போற்றும் பீடங்களைத்

தேடிக் கொண்டு

நாங்கள் செல்றோம் !

காரணம் :

உலோகாயுத இடி முழக்கமும்,

தொழிற் சாலை யந்திரச் சத்தமும்

அழுத்திக் கொண்டுள்ளன

நம்மை எல்லாம் !

ஆதலால்

நமது கவிதைகள் யாவும்

பார வண்டிகள் போல்

பளுவாய் உள்ளன !

நீராவி ரயில் விசில் போல்

தீராத உலைச்சல்

அளிப்பவை !

+++++++++++++++

உண்மைக் கவிஞர்களே !

எம்மை மன்னிப்பீர் !

புத்துலகைச் சேர்ந்த

நாமெல்லாம்

ஓடிக் கொண்டி ருக்கிறோம் !

உலோகாயுதப் பொருட்களைத்

நாடிய வண்ணம் !

கவிதையும் இப்போது

கடைச் சரக்காய்ப் போனது !

நித்திய மூச்சாய்

நிலைக்காது !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:

The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html

http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 7, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts