கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -5

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++++++++++++
நாம் எங்கே இருக்கிறோம் ?
++++++++++++++++++++++++++++++++++

விண்ணில் பறக்கிறது
கண்ணுக்குப் புலப் படாத
பறவை ஒன்று !
ஆயினும்
விரைந்து அந்தப் பறவை
விட்டுச் செல்கிறது
ஒரு நிழலை !
மனித உடல் என்ப தென்ன ?
உன் காதலில் உதித்த
ஒரு நிழலின்
மற்றொர் நிழல் அது !
அந்த நேசத்தில்
முழுப் பிரபஞ்சம் எப்படியோ
அடங்கி யுள்ளது !

+++++++++++

ஆழ்ந்து உறங்கு கிறான்
மனிதன் !
ஆதவன் போல்
விளக்கு ஒன்று அவனுள்ளே
ஒளிச்சுடர் வீசுகிறது
தாவணியின் கரையில்
உன்னத தோரணம்
தைத்துள் ளது போல !
போர்வை அங்கிக்குள்
புரள்கிறான்
மெருகிட்ட தோற்ற முகப்பெல்லாம்
மெய்யில்லை !
சிவப்புத் தூய கல்லொன்று
சுவைத்தால் இனிக்கிறது !

+++++++++++

ஓரழகிய பெண்ணின் வாயை
முத்தமிடு கிறாய் நீ !
அச்சத்தின் பூட்டைத்
திறக்கிறது
ஒரு சாவி !
கூறிய சொல் ஒன்று
கூர்மை யாய்த் தீட்டிக் கொள்ளும் !
குக்கூ வென கூவி
எங்கே என்று
தாய்ப் புறா ஒன்று
தன் கூட்டைத் தேடிச் செல்லும் !
தங்கும் இருப்பி டத்தில் ஒரு
சிங்கமும் உறங்கிறது !
ஆணும் பெண்ணும்
அங்குதான் போய் அழுகிறார் !
நோயாளி யும் அங்கு போவான்
நோய் குணமாகும்
என்னும்
நன்னம் பிக்கை யோடு !

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 22, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts