கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -1

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பேச இயலாத ஒரு விலங்கின் பரிதாபப் பார்வைக்கு ஓர் அர்த்தம் உள்ளது. அதை ஒரு ஞானிதான் உண்மையாக அறிகிறான்.
ஓர் இந்தியக் கவிஞர்.
+++++++++++

கலில் கிப்ரான் சொல்கிறார் :

குப்பைக் குவியலில் நோய்வாய்ப்பட்டு தோலில் கொப்பளங்களோடு நாய் ஒன்று சாம்பல் மேல் கிடப்பதைக் கண்டேன். அத்தமிக்கும் பரிதியை வெறித்து அங்குமிங்கும் பார்க்கும் அந்த நாயின் கண்கள் நாய் பட்ட இன்னல்கள், ஏமாற்றங்கள், அவமானத்தைக் காட்டின.

எனக்குப் புரிந்தது இது :

++++++++++++

மானிடா ! எனக்கு வந்த நோயால்
நானிடர்ப் படுவது
உனது முரட்டுத் தனத்தால்
ஓயாத தண்டிப்பால் !
காயப் படுத்தும்
உன் பாதத்தை விட்டு
ஓடி வந்து
இங்கு நான் அடைக்கலம்
புகுந்துள்ளேன் !
குப்பையும் சாம்பலும்
மென்மைத் தனமுடவை
உன் நெஞ்சைக் காட்டிலும் !
இந்தச் சிதைவுக் கூளங்கள்
மானிட ஆத்மாவை விட
வேதனை குறைப்பவை எனக்கு !
தலை இடாமல்
நீ வெளியேறு
நியாய மற்ற கொடுங்கோல்
ஞாலத்தை விட்டு !

++++++++++++++

நானொரு நொந்த பிறவி !
ஆதாமின்
புதல்வனுக்கு ஊழியம் செய்தவன்
நம்பிக்கை யோடும்
நேசத்தோடும் !
நான் மனிதனின்
நன்னம்பிக் கைக்குப்
பாத்திர மானவன் !
பாதுகாப்பேன் நான் அவரை
பகல் இரவெல்லாம் !
கவலைப் படுவேன்
அவன் இல்லாத வேளையில் !
வரவேற்பேன்
வாலாட்டி
வாசலில் கால் வைத்ததும் !
தட்டிலி லிருந்து
தவறிக்கீழ் விழுந்த ரொட்டித்
துண்டுகள்
திருப்தி தரும் எனக்கு !
பற்களி லிருந்து விழுந்த எலும்பின்
அற்பத் துணுக்குகள்
போதும் எனக்கு !
வயதாகி நோய்ப்பட்ட என்னை
ஓட்டினான்
வீட்டை விட்டு
காட்டுமிராண்டிக் கூட்டம்
காலால் மிதித்திட !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 23, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts