கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -4

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


++++++++++++++++++++++++
உருகும் பனியாக இரு
++++++++++++++++++++++++

என் காதற் பித்தை
ஏற்றுக் கொள் வாயா ?
ஆமென்று சொல் !
எந்த மொழியில் கூறுவாய்
அரபியிலா
அல்லது பாரசீ கத்திலா ?
திரும்பவும்
கட்ட வேண்டும் என்னை !
கொண்டுவா உன்
நெளிந்த கூந்தலின்
வளைந்த நாண்களை !
இப்போது நினைவுக்கு
வருகிறது
எனது கதை !

+++++++++++

உண்மை யான மானிடன்
உற்று நோக்குவான்
தன் பழைய செருப்பையும்
ஆட்டுத் தோல் உடுப்பையும் !
ஒவ்வொரு நாளும்
வீட்டுப் பரணில்
ஏறுகிறான்
வேலைப் பூட்ஸைக் காண,
கிழிசல் கோட்டை
நோக்க !
அறிந்த ஞானம் இது :
பிறந்த தனது பூர்வீக
மண்ணை
மறவா திருப்பது !
குடி போதையில் கிடந்து
நான் என்னும் அகந்தை,
தான்தோன்றித் தனத்தை அறவே
தவிர்ப்பது !

+++++++++++

பழைய காலணி களையும்
கிழிந்த கோட்டையும்
திரும்பவும் தேடுவது
பாராட்டுக் குரியது !
தனித்துவ அதிபன் இயங்குவது
வெற்றுச் சூனியத்தில் !
பணி புரியப்
பட்டறை இல்லை !
படைத்திட மூலப்
பண்டங்கள் கிடையா !
ஒன்றும் எழுதப் படாத
ஒரு காகிதத் தாளாய்
இருக்க முயல்வாய் !
எதுவும் முளைக்காத
ஒரு தரிசல் துண்டு நிலமாய்
இருப்பாய் !
அங்கே நீ விதையோ
இல்லை எதையோ
தனித்துவ அதிபன் நமக்கு
அளித்த தையோ
ஏதாவது ஒன்றை
விளைச்சல் செய்யலாம்

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 16, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts