ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++++++++++++++++++
உருகும் பனியாக இரு
++++++++++++++++++++++++
“உன்னோடு எப்போதும் இருக்கிறேன்”
என்றால், இறைவனை நீ
சிந்திக்கும் போது
உந்தன் விழிகளின் ஒளியில் இருப்பான் !
உன்னைக் காட்டிலும் அவன்
உன் அருகிலே ஒட்டி இருப்பான் !
உன் மூளையில் இருப்பான் !
உனக்கு நேரும்
வினைகளில் இருப்பான் !
இறைவனைத் தேடி நீ வெளியே
ஏகிட வேண்டாம் !
++++++++++
உருகிடும் பனியாக மாறிடு !
நீயாக நீ இருந்திட
நீயே உனைக் குளிப்பாட்டிக் கொள் !
வெள்ளைப் பூ ஒன்று
விரிந்திடும் மௌன மாக !
உன் நாக்கே அப்பூவா கட்டும் !
வானைப் போல் அகண்ட ஓர்
வாய் வேண்டும் எனக்கு
மெய் மனிதனின்
இயற்கையை எடுத்துச் சொல்லவும்
பேராசை கொண்ட
வார்த்தையைக் கூறவும் !
++++++++++++
எனக்குள் இருந்து
எளிதாய் நொருங்கும் இச்சிமிழ்
உடைந்திடும் அடிக்கடி !
நான் அதனால் பித்தனாவதில்
வியப்பில்லை !
ஒவ்வொரு மாதமும் நிலவு போல்
ஒளிந்து போவேன்
மூன்று நாட்கள் !
உன்னைக் காதலிக்கும் ஒருவனும்
காணாமல் இருப்பது
இந்த நாட்களில் தான் !
++++++++++++++++
நான் சொல்லும் கதையைப்
பின்னிடும் நூலை
நான் இழந்து விட்டேன் !
எனது யானை அலைந்து திரியும்
இந்தியக் கனவுகளில்
மறுபடியும் !
வசனக் கவிதை அமைப்புச்
சிதைந்து போனது
பதிலுக்கு எனது உடலும்
பாதிக்கப் பட்டது !
*****************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 2, 2010)
- உற்றுழி
- ஊடக ரவுடிகளும், ஊரை ஏமாற்றும் குருவி ஜோஸ்யக்காரர்களும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -7
- யார் முதலில் செய்வது?
- அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர் (1878-1968)
- சினிமா விமர்சனம் பேசித்தீராத தனது சொற்களால் ஆன ஓர் இஸ்லாமியனின் பயணம் (My name is khan)
- மனத்தின் நாடகம் வளவ.துரையனின் “மலைச்சாமி”
- சீதாம்மாவின் குறிப்பேடு — ஜெயகாந்தன் -4
- இணையதமிழின் ஒருங்கிணைப்பு
- பரிபாடலில் முருகன் வரலாறு
- ‘பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா பற்றி
- சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்
- ஆசிரியருக்கு
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி.
- கவிதைகள்
- இதுவும் கடந்து போகும்!!?
- மீட்பாரற்ற கரையும் நண்டுகளின் நர்த்தனமும்
- வேத வனம் விருட்சம்- 75
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -2
- நைட் ட்யூட்டி
- கியான்
- பாசத்திற்காக ஓர் ஏற்பாடு
- பொல்லாதவன்
- என் வயிற்றில் ஓர் எலி
- முள்பாதை 19
- நித்தியானந்தா விவகாரம் குறித்து சில சிந்தனைகள்
- மொழிவது சுகம்: ஒரு ‘போ(Po)’ன மொழியின் கதை
- ஆடம்பரமாய் செலவழிக்கப்படும் பல லட்சம் கோடிகள் – தீர்வு யார் கையில்??
- கூண்டுச் சிறுமி
- கே ஆர் மணி.
- கடன்
- காதலின் பெயர் பரிசீலனையில்..
- கவிதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -4
- கைமாத்து