இதுவும் கடந்து போகும்!!?

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

மீ.வச்ந்த் , சாத்தூர்டாலர் தின்று
ஜீரனிக்கும் நியூரான்கள்,
எப்போதாவது திரும்பி பார்க்கும்
அந்த நாள் பதிவுகளை…,

ம்..அது ஒரு காலம்.
இந்தியாவின் கவலைகள் தெரிந்த
கல்லூரி காலம்.
தமிழ் மொழியில் பேச்சு,
தாய் நாட்டுக்கு தொண்டு,
சின்னதாய் வீடு,
கொஞ்சமாய் பணம்.
எப்போதும் விருப்பமாய்
எதிர்கால இலட்சியமாய்!!?,
நன்றாய் தானிருந்தன நாட்கள்.

எழுதிய கவிதைகளும்
வாசித்த வரிகளும்,
இன்றைக்கும் எதிரொலிக்க,
ஒத்ததிர்வில் உணர்வுகள்
உடல் கிழித்து
உள்ளம் சுடும்.

சுட்டும் வலிக்காத
எபிடெர்மிஸ் தாண்டிய இரணங்கள்,
நிகழ்கால வாழ்வை நியாயப்படுத்த,
வெட்கமின்றி நகரும்
இன்றைய நாளும்……

மீ.வச்ந்த் , சாத்தூர்

vasanthmee@yahoo.com

Series Navigation

author

மீ.வச்ந்த் , சாத்தூர்

மீ.வச்ந்த் , சாத்தூர்

Similar Posts