கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் கவிதை -23 பாகம் -2

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“இரவின் அடர்ந்த காரிருளில் ஒரு சகோதரன் தன் சகோதரனைக் கூப்பிடுகிறான். தந்தை மகனை விளிக்கிறார். தாய் சேய்களை அழைக்கிறாள். அப்போது பசிக் கொடுமை அனைவரையும் சமமாகச் சித்திரவதை செய்கிறது.

ஆனால் அதே சமயத்தில் மரணத்துக்குப் பசி இல்லை, தாகமில்லை ! மரணம் எமது ஆத்மாவை விழுங்கி எமது குருதியைக் குடித்து, எம்மைக் கிழித்துப் போடுகிறது ! அதன் கோரப் பசி மட்டும் திருப்தி அடைவதே இல்லை !

கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)

எனக்குக் கேட்கிறது நீ சொல்வது
என் கண்மணி !
உனது அழைப்பைக் கேட்டேன்
கடலுக்கு அப்பால் !
உடலைத் தொடும்
உன் மெல்லிறக்கை உணர்ந்தேன் !
படுக்கையை விட்டு
பசும்புல் தளத்தில் நடந்தேன் !
இரவின் பனித்துளிகள்
ஈரமாக்கும் என் பாதங்களை
அங்கியின் விளிம்பை !
இங்கு நிற்கிறேன்
ஆல்மண்டு மரப் பூக்களின்
கீழாக நானுனது
ஆன்மாவின்
அழைப்பைக் கேட்டு !

வாய் திறந்து பேசு என்னோடு
என் கண்மணி !
லெபனான் மலைப் பகுதியி லிருந்து
என் மீது வீசும் காற்றை
உன் மூச்சு வலுமை ஆக்கட்டும் !
பேசு என்னோடு
என் செவியைத் தவிர வேறு
எவர் காதிலும் விழாது !
எல்லோரையும் ஒன்றாய்
ஓய்வெடுக்க
இழுத்துப் போய் விட்டது
இரவு !

வெண்ணிலவின்
வெண்மைத் துகில் போர்த்தி
லெபனான் நாட்டையே
வான மண்டலம்
மூடி விட்டது என் கண்மணி !
தொழிற்சாலை வெளியேற்றும்
புகை மூட்டம் எழும்பி
வான் வெளி யாவும்
இரவு நிழலாய்
அங்கி போல் போல் மூடிப்
பரவியுள்ளது
அடர்த்தி யாக !
மரணத்தின் மூச்சு வீசி
நரகமாய்
நகர அரங்கு
நாசமாய்ப் போகும்
என் கண்மணி !

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts