கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிதை -23 பாகம் -1 ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


"இரவின் அடர்ந்த காரிருளில் மரணம் மெல்ல நடந்து வருகிறது. நாங்கள் யாவரும் அதன் பின்னால் நடக்கிறோம். அது திரும்பி நோக்கும் போது நூற்றுக் கணக்கான ஆத்மாக்கள் பாதையின் இருபுறமும் தடம் புரண்டு கீழே விழுகின்றன ! விழுந்திடும் ஒரு நபர் விழிப்பதில்லை மீளா உறக்கத்திலிருந்து ! நடந்திடும் மாந்தர் நெஞ்சில் பயமுடனும் பின்னால் மரிக்கப் போகும் உறுதியுடனும் மடிந்தோருடன் சேர்ந்திடத் தொய்வு நடை போடுகிறார். மாலையின் மங்கிய செவ்வான வெளிச்சத்தின் தூரத்தில் மரணம் வெற்றி நடை போடுகிறது !

கலில் கிப்ரான்
(லெபனானில் முதல் உலகப் போரின் சமயத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை பற்றி)

+++++++++

விழித்தெழு என் காதலி !
விழித்தெழு !
ஏழு கடல் தாண்டி
என் ஆத்மா வரவேற்கும்
உன்னை
தனது இறக்கைகளைப்
பொங்கும் அலைகள் மீது
அனுப்பி !

விழித்தெழு ! என் காதலி !
அமைதி யானது
அமுக்கி விட்டது
புரவிகள் போட்ட
பாத நடைகளின்
அரவத்தை,
பயணிகளின் படபடத்த
படி நடை
எட்டு வைப்புகளை !

தூக்கம் மெல்லத் தழுவிடும்
மானிட ஆன்மாக்களை
நான் தனியே
விழித்துள்ள போது !
உறக்கம் சூழ்ந்திடும் வேளை
என்னை
விழித்திட வைக்கும்
மோகம் !

உன்னருகே இழுத்திடும் காதல்
என்னை !
ஆயினும் தள்ளிடும் என்னைத்
தூரமாய்
மன உலைச்சல் !
மறதிப் பிசாசு ஒளிந்து
பயமூட்ட
படுக்கை விட்டெழுந்தேன்
அருமைக் காதலி !

பக்கத்தில் வைத்தேன் எனது
புத்தகத்தைப் படிக்காது.
நூலின் வார்த்தைகள் எல்லாம்
கவலையால்
ஊமையாய்ப் போயின !
விழிக்குத் தெரிந்தவை
வெளிறிய
வெற்றுத் தாள்களே !

விழித்தெழு என் காதலி !
விழித்தெழு
என் சொல் கேட்பாய் !
என் சொல் கேட்பாய் !

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 9, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts