கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -1

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உதவ முடியா நெருக்கடிகள்

++++++++++

நீ விரும்பும் விசித்திர
நிகழ்ச்சிகளின் அறிகுறிகள் இவை :
இரவு முழுவதும் அழுது
உதயத்தின் போது
எழுந்து வேண்டுவாய் :
பகலுக்குத்
தேவை யானதை நீ
கேளாத போது
இருள் கவ்விக் கொள்கிறது !
உன் கழுத்து குச்சிபோல்
உள்ளது !
உனக்குச் சொந்த மான
உறக்கம், உடல் நலம்,
உன் சிந்தனை அனைத்தையும்
பிறர்க்குத் தானம் செய்யும்
ஒரு தியாகி நீ !
நெருப்பின் நடுவே நீ அமர்ந்து
நெளிந்த
மண்டைக் கவசம் அணிந்த
படையாளியின்
உடை வாளையும் தொடப் போவாய்
அடிக்கடி !
உதவ முடியா நெருக்கடிகள்
ஒருவருக்கு
நடமுறை யானால்
இவைதான்
எடுத்துக் காட்டும் அறிகுறிகள் !

+++++++++++++

ஆயினும் நீ அங்கு மிங்கும் ஓடி
அபூர்வ நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டு
ஆழ்ந்து நோக்குவீர்
பயணம் போகும் முகங்களை !
பைத்தியம் போல் நீ ஏன்
பார்க்கிறாய் என்னை ?
நண்பனை இழந்த என்னை
மன்னிப்பாய் !
அப்படித் தேடுவது
தோல்வி பெறாது ! உன்னை
நெருங்கி அணைத்துக் கொள்ளும்
ஒரு குதிரை வீரன்
வருவான் !
மயக்கமுற்று உளறுகிறாய் நீ !
முகவரி இல்லாதவர்
அவனைப் போலி என்பார்
அவருக்கு எப்படித் தெரியும் அது ?
கடற்கரை மீன் ஒன்றை
அடித்துத் தள்ளும்
நெருக்கடிகளின் கடல் நீர் !
என் குழப்பத்திற்கு மன்னிப்பீர் !
எப்படி ஒருவன் குழப்பத்தில் சீராய்
இயங்க முடியும் ?

***************************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 8, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts