கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -2 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஐந்து உரைகளை மொழிவேன்

++++++++++

இவ்வாறுதான் அவர் சொல்கிறார்
சுற்றியுள்ள
ஒவ்வொரு வரும்
அவனோடு
அழத் தொடங்குவார்
கிறுக்குத் தனமாய்ச்
சிரித்துக் கொண்டு,
காதலன் காதலியிடம் ஐக்கியம்
ஆவதை
முணுமுணுத்து !
மெய்யான மதம் இதுதான்
மற்றவர் யாவரும்
அத்தோடு தம் கால் கட்டுகளை
அறுத்து விட்டார் !

+++++++++++++

இதுவே அடிமைத் தனமும்
அதிகாரத் தனமும்
கைகோர்த்து நடம் புரியும்
காட்சிக்கு ஓர்
எடுத்துக் காட்டு !
இதுவே உயிர்த் தனத்தை
இல்லாமை ஆக்கும் !
வாய் வார்த்தைகளோ
அல்லது
இயற்கை மெய்ப் பாடுகளோ
தயங்கும் உரைப்பதற்கு
இவற்றை !

+++++++++++++++

இந்த நாட்டியக் குழுவினரை
நன்கு அறிவேன் !
பகல் இரவாய்ப்
பாடுவேன் அவரின் பாடல்களை
இந்த உணர்ச்சிக் கூண்டில் !
என் ஆத்மாவே
இதற்குப் பதில் கூறாய் !
ஒரு தோழனைத் தேடி நீ
மறைந்து கொள் !
ஆனல் பதுக்குவது என்றாவது
காணாமல் போகுமா ?
காதலின் ரகசியம்
தலை தூக்கும் எப்போதும்
மறைவிடத்தி லிருந்து !
“இங்குளேன்”
என்பதைக் காட்டி !

***************************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 2, 2010)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts