ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஐந்து உரைகளை நான் மொழிவேன்
++++++++++
விழித் தெழுந்த காதலன்
நேரே
விளம்புகிறான்
தன்னருமைக் காதலியிடம் :
“நீதான் எனது
ஆன்மா சுற்றி வரும்
வானுலம் !
காதல் உட்கருவின்
நேசம் !
அதுவே எனக்கு
மீள் பிறப்பிடம் !
+++++++++++++
இந்தச் சாளரம்
உந்தன் செவியாய் இருக்கட்டும் !
செவிமடுக்கும்
உன் மௌனத்தை விரும்பி
புத்துயிர் அளிக்கும் உன்
புன்னகை நோக்கி
பல தடவை
என் மன உணர்வை
இழந்தேன் !
விளக்க நுட்பங்களில்
செலுத்து உன் கவனத்தை !
பெரிதான என்
இரகசிய
ஐயப்பாடுகள் அவை !
+++++++++++++++
எனது நாணயங்கள் எல்லாம்
போலி யானவை
என்பதை நீ அறிவாய் !
ஆயினும் நீ
அவற்றை வாங்கிக் கொண்டாய்
ஆசையாய்,
என் அவமதிப்பைக் கண்டும்
என் பசாங்கைப்
பார்த்தும் !
+++++++++++++++
ஐந்து உரைகளை நான்
மொழிவேன் !
ஐந்து விரல்களால் எண்ணி
நீட்டுவேன்
உன்னருட் கொடைக்கு !
+++++++++++++
முதலாக நான் மொழிவது :
உன்னை விட்டுப்
பிரியும் போது இவ்வுலகே
தெரியாமல் போகும் !
வேறெந்த உலகும்
தோன்றாது !
இரண்டாவது :
நான் தேடிப் போவ தெல்லாம்
நீதான் எப்போதும் !
மூன்றாவது :
நான் ஏன் மூன்றாவது
இலக்கத்தை
எண்ணிடக் கற்றேன் ?
நாலாவது :
என் தானிய விளைநிலம்
எரிந்து கொண்டுள்ளது !
ஐந்தாவது :
இந்த விரல்
புனித மங்கை
ரபியாவின்* சார்பாக
நிற்கிறது !
வேறு
யாருக்கோ சொந்தம் !
இதில் ஏதும்
மாறுபாடு உண்டா ?
++++++++++
வார்த்தைகளா
அல்லது விழிகளின்
நீர்த் துளிகளா
அவை யெல்லாம் ?
நீ அழுதது போதாதா ?
என்னருமைக் காதலி !
சொல்
என்ன செய்ய வேண்டும்
நான் இனிமேல் ?
***************************
*Rābia al-Adawiyya al-Qaysiyya was a female saint.
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 26, 2010)]
- திரைகடல் ஓடியும் கலையைக் கற்போர் (ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்)
- முள்பாதை 15
- நூடில்ஸ்
- கே.பாலமுருகனின் ‘அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே – மணியம் பேருந்துகளும்’ – சிறுகதை விமர்சனம்
- வடமராட்சி – அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அபராதி’ எனும் குற்றமிழைத்தவன்
- வீரசோழியம் இலங்கை நூலா? தமிழ்நாட்டு நூலா?
- எப்போதும் கவிதை என்னை எழுதியதேயில்லை கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி” கவிதைகள்
- நினைவில் உறைந்த வரலாறு முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- புதுவகை நோய்: இமி-முற்றியது
- Appeal for Donations For Temple’s permanent construction
- தமிழ் இணையப் பயிலரங்கம்
- மியம்மார் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம்.
- தமிழ்ச்செல்வனுக்கு …
- அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய என்ரிக்கோ ஃபெர்மி.
- பறவைகளின் வீடு
- இயற்கைதானே
- ராகவன் உயிர் துறந்தான்
- மறுகூட்டல்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -2
- அன்பாலயம்
- சூரியனும் சந்திரனும்
- மொழிவது சுகம்: புர்க்காவும் முகமும்
- துறை(ரை)களின் சூதாட்டமும் கவிழும் பொருளாதார / வெளியுறவு கொள்கைகளும்
- வாழ்வின் (அ) சுவாரஸ்யங்கள்
- வேத வனம் விருட்சம் 70
- இன்று
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -6
- கவிஞானி ரூமியின் கவிதைகள் கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -1 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !
- இயற்கைதானே
- திரு ஜயபாரதன் கட்டுரைகள்