கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -6

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“என்னருமைக் காதலி ! தேசத்தின் வரலாறு தனிப்பட்ட குடிமக்களின் வாழ்க்கையைப் போன்றதுதான். நம்பிக்கையில் மலர்ந்து, அச்சத்தில் பின்னிய வாழ்க்கை பேராசையால் தாக்கப்பட்டு, மன முறிவால் தாழ்ச்சி அடைகிறது.”

கலில் கிப்ரான் (மனித ஐக்கியம்) (Union)

+++++++++

<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>

கவிதை -22 பாகம் -6

++++++++++++

மரங்கள் வசந்த காலத்தில்
மலர்களை
விரிக்கு மென உணர்கிறேன் !
வேனிற் காலத்தில் அவை
கனிகளைக் காய்த்துக் கொட்டும்
புகழை எதிர்பார்க் காது !
இலைகளை
எல்லாம் உதிர்க்கும் மரங்கள்
இலையுதிர் காலத்தில் !
அமணமாய் நிற்கும் மரங்கள்
குளிர் காலத்தில்
பழிப்புக்கு எவ்விதப்
பயமும் இல்லாமல் !

++++++++++++++

ஆத்மா எனக்குப் போதித்து
அறிவு புகட்டும் :
ஆ·பிரிக்கக் குள்ளனும் அல்லன்
நான் பூத வுடல்
அசுரனுக்குத் தாழ்ந்தோனும் அல்லன் !
என் ஆத்மா போதிப்பதற்கு
முன்னே
மனித இனத்தை
இரண்டாய்க் கண்டேன் !
பரிதாபப்படும்
பலவீன மானவன் ஒருத்தன் !
பின்பற்றும்
அல்லது எதிர்த்திடும்
வல்லமை பெற்றவன் ஒருத்தன் !

++++++++++++++

இப்போது கற்றுக் கொண்டேன் :
ஒரே மூலக்கூறுகளே நான்
அதுபோல்
ஒரே வித மூலகங்களால்
உருவாக்கப் பட்டவன் என்று !
எனது தோற்ற மூலாதாரமே
அவரது மூலா தாரமும் !
என் உள்ளத் துடிப்பு உணர்ச்சியே
அவரது உள்ளத் துடிப்பும் !
எனது மன திருப்தியே
அவரது இதய திருப்தியும் !
எனது வாழ்க்கைப் பயணமும்
அவரது யாத்திரையை
ஒத்ததுவே !

(தொடரும்)

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 26, 2010)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts