கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -8 மதுக்குடி அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


புதிய நியதி

++++++++++

பழைய நியதி இதுதான் :
குடிப்போர்
வாதாடிச் சண்டை இடுவர்
மோதிக் கொண்டு !
காதலர் அதற்கும் மோசம் !
பாதாளக் குழியில்
வீழ்வார் ! அவர்
கீழே காண்பது
மினுமினுக்கும் ஏதோ ஒன்றை !
பண மதிப்பளவைத்
தாண்டிய தொன்றை !
ஆற்றல் மிக்க தொன்றை !

+++++++++++++

நேற்றிரவு நிலவு வந்தது
உடைகளை
நீக்கிக் கொண்டு
வீதியில் !
எனக்கது ஓர்
சமிக்கையாய்த் தோன்றும்
வானக் கும்பாவில் வீழ்ந்து நான்
கானம் பாடிட !
பானை உடைந்தது,
எல்லா இடங்களும் இடிந்தன
எதைச் செய்யவும்
இயல வில்லை
என்னால் !

+++++++++++++++

இதுவே புதிய நியதி :
கண்ணாடிக் கலயத்தை உடைத்து
ஒயின்
முன்பாக சரண் அடை
கண்ணாடிக் குமிழி ஊதுவோர்
மூச்சுக்குள்ளே !
இதுதான் சித்திரவதை !
மிகவும் களைத்துப் போனேன் !
தடுக்கப்படும் வேதனையில்
முடங்கி யுள்ளான்
பித்தனைப் போல் !
இந்த இதயக் கனியின்
உட் சுளையைச்
சுவைப்பதற்கு
ஓட்டை*
உடைத்த வாறு இருக்கும் !

***********************
*ஓட்டை : Shell
***********************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 19, 2010)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts