கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -5

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“உனது விழிகளில் சோகத்தைக் காண்கிறேன் என்னருமைக் கண்மணி ! நீ என்னருகில் உள்ள போது துயர் அடைகிறாயா ? எனது புதல்வரும் புதல்வியரும் மீண்டும் வருவாரா என்று நான் துயரடைய என்னை விட்டு விட்டுக் கடல் தாண்டிப் புலம்பெயர்ந்து போய் விட்டார் !”

கலில் கிப்ரான் (மனித ஐக்கியம்) (Union)

+++++++++

<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>

கவிதை -22 பாகம் -5

++++++++++++

என் ஆத்மா போதிப்பதற்கு
முன்னே உணர்ந்தேன்
நடந்து சென்ற போதெல்லாம்
இடமெனக்குத்
தூரமாய்த் தெரிந்தது !
இப்போது
எனக்குத் தெரிகிறது :
எந்த இடத்தில் வசித்தேனோ
அந்த இடத்தில்
கிடைத்தன எல்லாம் !
நடந்து வந்த தொலைவில்
அடங்கின
அனைத்துத் தூரங்களும் !

++++++++++++++

ஆத்மா அறிவூட்ட
ஆலோசனை கூறும் எனக்கு :
பிறர் தூங்கும் வேளை நீ
விழித்திரு வெனச் சொல்லும் !
பிறர் வேலை செய்யும்
தருணத்தில் நீ
உறக்கத்தில்
சரண் அடை யெனக் கூறும் !
என் ஆத்மா உரைப்பதற்கு
முன்பு நான் என்
உறக்கத்தில் காணேன்
பிறரது கனாக்களை !
அதுபோல்
அவரும் என் உள்ளொளியைக்
காண வில்லை !

+++++++++++++++++

இப்போது நான்
எனது கனவுகளின்
கப்பலில்
செல்வ தில்லை அவர்
காணாத சமயத்தில் !
அவரும் தமது உள்ளொளியில்
வானுயர ஏறுவ தில்லை
நானவர் விடுதலையில்
ஆனந்தம்
அடையாத போது !
ஆத்மா எனக்குப் போதிக்கும் :
பிறர் உன்னைப்
புகழும் போது நீ
பூரிப்படை யாதே !
பிறர் உன்னைப் பழிக்கும் போது
வருத்தம் அடையாதே !
ஆத்மா அறிவுரை கூறுவதற்கு
முன்பு என் பணிகள்
பயனற்றவை என்று நான்
ஐயமுற்றேன் !

(தொடரும்)

*************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 19, 2010)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts