ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
எரிந்து போன புலால் உணவு
++++++++++
ஒயின் வகைகளைச்
சுவைக்கக் கடந்த வருடம்
உவப்போடு இருந்தேன் !
செந்நிற உலகுக்குள்
சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன் !
சென்ற வருடம்
செந்தீயை உற்று நோக்கினேன்.
இவ்வருடம்
எரிந்த புலால் உணவாக
தகிக்கிறேன் !
தாகம் என்னைத்
தண்ணீருக்குள் தள்ளியது !
அங்கே
நிலவின் பிரதி பலிப்பை
அருந்தினேன் !
+++++++++++++
நானொரு சிங்கம் இப்போது,
மதுவின் மோகத்தில்
முழுவதும் மூழ்கிப் போய்
விழிக்கிறேன் !
தீராத என் இச்சை பற்றிக்
கேளாதீர் !
பாரீர் என் முகத்தை !
குடி போதையில் ஆத்மா !
முடங்கிப் போன உடல் !
உடைந்த வாகனத்தில்
உள்ளன அவை இரண்டும்
உதவி யின்றி !
எதற்கும் வண்டியைச்
செப்பனிடத்
தெரியவில்லை !
+++++++++++++++
புழுதிக் குழியில் விழுந்து
எழுந்திடத் தவித்து ஆழ்ந்து
புதைந்து போகும்
கழுதை போல்
என்னிதயம் தோன்றும்
எனக்கு !
ஆயினும் ஒருகணம் நான்
சொல்வதைக் கேள் !
துக்கமுறுவதைத் தவிர்த்திடு !
உன்னைச் சுற்றி
உனக்குக் கிடைத்துள்ள
கொடைகளின் மலர்ச்சியை
உனது
உடமையாய்க் காண்பாய் !
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 11, 2010)]
- கரைப்பார் கரைத்தால்
- உண்மை பேசும் சிநேகிதம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -7 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம் -விருட்சம் 68
- வானுக்கு கீழே அதன் வாழ்க்கை
- விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்
- ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்
- குழந்தையின் கண்களால்
- வண்ணநிலவனின் நாவல் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’
- புதுவகை நோய்: இமி-5
- “ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு” கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்
- வஹ்ஹாபியின் மோசடி
- இயல்பாயொரு இயல்பு உடைத்தல்..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -4
- பொட்டலம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -6 (கடைசிக் காட்சி)
- மாயபிம்பம்
- பள்ளத்தாக்கு
- பள்ளத்தாக்கு (முடிவு)
- முள்பாதை 13
- மொழிவது சுகம்: அடித்து வளர்க்கிற பிள்ளைகள்
- அறம் செறிந்த அன்பும் மறமும்
- காத்திருப்பேன்
- இதையும்
- அரசியல்
- நான் யார்?