மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“நைல் நதிக் கரையில் அமைந்துள்ள அரண்மனைகளும், ஆலயங்களும் உனது புகழை வெளிப்படுத்தும். அங்குள்ள பெண்தலைச் சிங்கச் சிற்பம் (Sphinx) உன் உன்னத்தை அறிவிக்கின்றது. உனது பரிவும், பாசமும் இனிமையானது. உன் உள்ளத்தில் குடியிருக்கும் நம்பிக்கை எத்தகைய அற்புதமானது ! நீ எனக்கு அனுப்பிய வாலிபர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து வந்தவர் போல் காணப்படுகிறார். நீ அளித்த மனிதர் எனது மக்களின் பலவீனத்தை வெல்லும் மன ஊக்கம் கொண்டவர். அவரை விடச் சிறந்த அறிவாளர். அவரது அறிவைச் செழிக்க வைக்கும் மேதைகள்.”
“நான் அனுப்பிய விதைகளை நீவீர் பூக்களாக மாற்றினீர். பிஞ்சுச் செடிகளை மரங்களாக உயர்த்தினீர். ரோஜா மலர்களும், மல்லிகைப் பூக்களும், சைப்பிரஸ் மரங்களும், தேக்கு மரங்களும் கொண்ட நீ ஒரு புதிய பசும்புல் நிலம் !”
கலில் கிப்ரான் (மனித ஐக்கியம்) (Union)
+++++++++
<< ஆத்மாவின் உபதேசம் எனக்கு >>
கவிதை -22 பாகம் -4
++++++++++++
என் ஆத்மா போதிப்பதற்கு
முன்பு நான்
எந்தக் குரலுக்கும் பதில்
தந்திலேன்
எனக்குத் தெரிந்த ஓர்
அழுகுர லுக்குத் தவிர !
பளிங்கு போல்
எளிய
பாதைகளில் நடந்திலேன் !
இப்போது
தெரியாதது ஒன்று
புரவி யாகி
அதன் மீது நான் அமர்ந்து
தேடிச் செல்கிறேன்
தெரியாததை !
++++++++++++++
பசும் புல் நிலமானது
ஏணியாக
மாறிப் போனது !
ஏறிச் சென்றேன் அதன் மேல்
சிகரத்துக்கு
அதைப் படிகளாக்கி !
ஆத்மா என்னிடம்
சொல்லும் :
நேற்று என்றோ அல்லது
நாளை என்றோ
கால நேரத்தைக்
குறிப்பிட்டுக் கணிக்காதே
பரிமாணம் என்று !
++++++++++++++
என் ஆத்மா உரைப்பதற்கு
முன்பு நான்
சென்றதினி மீளாதென
நினைத்தேன் !
கடந்த காலம் ஓர் மைல்
கல்லென்றும்
எதிர்காலத்தைக்
கைக்கொள்ள முடியா தெனவும்
கற்பனை செய்தேன் !
இப்போது உணர்கிறேன்
இன்றைய பொழுதே
எல்லாக் காலத்துக்கும் அடங்கும் !
இன்றைய தருணத்தில்
எதிர்பார்த்த விருப்புகளும்
இயக்கப் பணிகளும்
மெய் உருவாக்கமும்
கைகூடும் நமக்கு !
இங்கு, அங்கு, அப்பால் என்று
நாட்டுக்கு
எல்லைக் கல் வைக்காதே
என்று ஆத்மா வற்புறுத்தி
எனக்கு உபதேசிக்கும் !
(தொடரும்)
*************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 12, 2010)]
- கரைப்பார் கரைத்தால்
- உண்மை பேசும் சிநேகிதம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -7 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம் -விருட்சம் 68
- வானுக்கு கீழே அதன் வாழ்க்கை
- விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்
- ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்
- குழந்தையின் கண்களால்
- வண்ணநிலவனின் நாவல் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’
- புதுவகை நோய்: இமி-5
- “ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு” கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்
- வஹ்ஹாபியின் மோசடி
- இயல்பாயொரு இயல்பு உடைத்தல்..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -4
- பொட்டலம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -6 (கடைசிக் காட்சி)
- மாயபிம்பம்
- பள்ளத்தாக்கு
- பள்ளத்தாக்கு (முடிவு)
- முள்பாதை 13
- மொழிவது சுகம்: அடித்து வளர்க்கிற பிள்ளைகள்
- அறம் செறிந்த அன்பும் மறமும்
- காத்திருப்பேன்
- இதையும்
- அரசியல்
- நான் யார்?