ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பல்வேறு ஒயின் வகைகள்
++++++++++
கருமை நிறத்தில்
உக்கிரமாய்ப் போதை தரும்
ஒரு வித ஒயினைக்
கடவுள் கொடுத்துள்ளார் நமக்கு !
அதனைக் குடித்தால் நாம்
இவ்விரண்டு
அவனியை விட்டு நீங்குவோம் !
ஹாஷீஸ்* மயக்கச் செடியில்
கடவுள் இட்டுள்ளார்
குடி போதைத் தீவிரத்தை
குடிப்பவன் சுயத் தன்மை
விடுதலை பெற !
+++++++++++++
உறக்கத்தை அளித்துக் கடவுள்
ஒவ்வொரு
நினைவையும் அழிப்பார் !
மஞ்னு லைலாவை
நேசிக்கச் செய்தவன் இறைவன் !
அவளது நாயும்
அவனைக் குழப்பி
அவலப் படுத்தக் காரண மாகும் !
ஆயிரக் கணக்கில் உள்ளன
ஒயின் வகைகள்
நமது மூளையை ஆட்டுவிக்க !
++++++++++++++
எல்லா வித மான
எக்ஸ்டஸீஸ்* மருந்தெல்லாம்
ஒன்றல்ல !
ஏசு நாதர்
தன்னையே அர்ப்பணம் செய்தார்
இறைவன் மேல் கொண்ட
அன்புக்காக !
ஏறி வந்த அவரது
கழுதை
பார்லிக்* குடிப் போதையில்
ஊர்ந்தது !
+++++++++++++
குடிப்பாய் நீ
புனிதர் முன்னிலையில் !
மற்றவர் குவளைகளில் நீ
மதுவை அருந்தாதே !
ஒவ்வோர் வடிவமும்
ஒவ்வோர் உயிர் இனமும்
இனிமை நிரம்பிய குவளைதான் !
ஓவியக் கலைஞனாய்
உலவி மதுவைக்
கவனமோடு சுவைப்பாய் !
+++++++++++
ஒயின் எதுவாயினும் போதை
ஊட்டுவதே !
அரசனை உளவுவது போல்
ஆய்வு செய் அதனை !
தூய்மை யான மதுவை
கலப்பட மற்றதை
அவசிய மானதைக்
கவனமாய்த் தேர்ந்தெடு !
+++++++++++
அவிழ்த்து விட்டதும்
ஊர்ந்து
மெதுவாய் நகரும்
ஒட்டகம் போல்
உன்னை இயங்க வைக்கும்
அத்தகைய
ஒயினைக் குடிப்பாய் !
+++++++++++
ஹாஷீஸ்* —> Hashish
எக்ஸ்டஸீஸ்* —> Ecstasies
பார்லி* —> Barley
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
+++++++
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 28, 2009)]
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள்(கட்டுரை: 4).
- இடைத்தேர்தல்: சில பாடங்கள்
- இதற்குத்தானா ; இதெல்லாம் இதற்குத்தானா…….?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -2
- நவம்பர் 2009 குறுக்கெழுத்து புதிருக்கான விடை
- கவிராஜர்களின் பார்வையில் விலைராணிகள்
- “சந்திர யோகம்”
- அவதார் – பழங்குடி மூதாதையர்களின் சொற்களும் அரசியலின் பிரமாண்டமும்
- அன்புள்ள ஆசிரியர்
- எனது பர்மா குறிப்புகள்
- நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய் : இமி – 1
- நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய் : இமி – 2
- அரேபிய ராசாக்கள்..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-5 மதுக்குடி அங்காடி (The Tavern)
- வேத வனம் விருட்சம் 66
- கீழ்க்கணக்கு
- தூண்டில்
- தொழில் நேர்த்தி
- என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -4
- முள்பாதை 11
- நுகர்வு கலாச்சாரமும் அதற்கு வள்ளுவர் தரும் மாற்றும்
- விளம்பரங்களில்
- காரண சரித்திரக் கவிதை
- விழுங்கப்பட்ட வாழ்வு
- நல்லானின் புனித மோசடி கட்டுரைக்கு மறுப்பு: புதுவகை நோய்: இமி-3