கவிஞானி ரூமியின் கவிதைகள்(கி. பி. 1207-1273)கவிதை -2 பாகம்-4மதுக்குடி அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 29 in the series 20091225_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மயிரைப் பிளப்பதிலும்
நுணுக்க மாகத் திருக்கம் செய்து
சீரமைக்கும் மனது !
ஆயினும்
கலைப் படைப்போ
கைச் செதுக்கோ
துவக்கம் ஆவது மில்லை
தொடர்வது மில்லை
குருதேவர் ஒருவர்
அரிய ஞானம் புகட்டாது !

கவிஞர் ரூமி

+++++++++++

கவிதை -2 பாகம்-4

மதுக்குடி அங்காடி

குழந்தைகளின் விளையாட்டு

++++++++++

விளையாட்டுக் குதிரைகள் மீதேறும்
மதலைகள் போலச்
சேனைப் படையினர்
புரவி மேல் ஏறிப்
புகழ்ந்து கொள்வார் !
போர் புரிவதலிலும்
புணர்ச்சிக் கலவையிலும்
பொருளில்லை
உமது வினைகளுக்கு !
‘தந்தானே தகிடத் தந்தானே’ என்று
இடை உடுப்பைப் பற்றித்
தவ்வித் தவ்விச் சுற்றுகிறாய் !

+++++++++++++

மரணம் வரும்வரைப் தாமதிக் காதே
இதனைக் காண !
அறிந்து கொள்வாய் நீ
உனது கற்பனை, உனது சிந்தனை
உணர்ச்சிக் கூர்மை ஆகியவை
மதலையர் செதுக்கி
மூங்கில் கணுக்கு களைக்
குதிரை போல் வடித்தவை !

++++++++++++++

மர்மக் காதலரைத் தெரிந்து கொள்வதில்
மாறாட்டம் உள்ளது !
சுருக்கப் பட்ட விஞ்ஞானம்,
உணர்ந்திடும் ஆன்மீகம் ஆகியவை
கழுதை மீதேற்றிய
பொதிகள் போன்றவை ! அல்லது
அழகி ஒருத்திக்குப் பூசிய
ஒப்பனை போல்பவை !
கழுவினால் அழிபவை !

+++++++++++++

பளுவைச் செம்மையாய்த் தூக்கினால்
களிப்பினை அளித்திடும் !
ஆயினும்
சுயத் தேவைக்கு
அறிவுப் பொதி சுமப்பதை
நிறுத்திடு !
இச்சைகளையும் வேண்டுதலையும்
தவிர்த்திடு !
உன் கால் அடியே
ஓர் உண்மைப் பீடம் தோன்றலாம் !
வார்த்தை களால் வெறும்
ஒப்பனை செய்யும்
கடவுளின்
ஒலிப் பெயரைக் கேட்டு
அடையாதே
அகத்தினில் திருப்தி !

***************************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

+++++++

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 22, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts