ஏ.தேவராஜன்,மலேசியா
1
வானம் பிளந்து கொண்டது
யாரும் எதிர்பார்த்திடாத் தருணத்தில்
நட்சத்திரங்களோ இராட்சசக் கற்களோ
உதிர்வதற்குப் பதிலாக
மனித சாயலில் சதைப் பிண்டங்களாகப்
பெருத்த கவிச்சியுடன் விழுந்தன
மனிதர்கள் அவற்றைப் பெறுக்கி
ஒவ்வொன்றாய் இணைக்கத் தொடங்கினர்
மொட்டை மரத்து உச்சாணிக் கொம்பில்
கழுகொன்று வெகு நேரமாய்
உன்னித்தபடியிருந்தது
இணைக்கப்பட்ட சதைப் பிண்டங்கள் குறித்து
மனிதர்களுக்குள் மோதல் வலுத்துச்
சாத்தான் எனவும்
கடவுள் எனவும்
சாத்தானின் வகைகளுள் ஒன்றெனவும்
கடவுளின் அவதாரத்தில் ஒன்றெனவும்
மனிதர்கள் கைகலப்பில் இறங்கினர்
கழுகொன்று முடிவெடுக்க நேர்ந்தது
சட்டெனக் கீழ் நோக்கிப் பறந்து
திகட்டத் திகட்டக்
கொத்தித் தின்றது
சிதறு தேங்காய்களாய்க் கிடந்த
மனித உடலங்களை
2
ஒரு நாள் முழுக்க
உடம்பில் மேய்ந்து
அடங்குகின்றன
பிராணிகள்
பிராணிகளைக் கொல்வது
பாவமென்றாலும்
அவற்றின் அசூசையில்
எனக்குக்
குமட்டிக்கொண்டு வருகிறது
நிர்வாணமாய்க் கிடக்கிறேன்
நான் விரும்பும் பிராணியொன்று
என்னில் மேய்ந்ததே கிடையாது
நானும் மேய்வதறியாது
அப்பிராணியாய்க் கிடப்பதாக
என்னில் மேய்ந்த பிராணிகள்
பகடி செய்கின்றன
மேய்ச்சலுக்குச் செல்வதாய்
வீராப்புக் காட்டி
கொட்டிலுக்குள் அடங்கிவிடுகிறேன்
ஒவ்வோர் இரவும்
சில மாமாங்கங்கள் கழித்து
எனக்கு விடுதலை தருவதாக
மேய் பிராணிகள்
இரக்கப்படுகின்றன
அதற்குப் பின்னான வாழ்வு பற்றி
எண்ணிப் பார்க்க
அவை எனக்குச்
சொல்லித் தரவில்லை
ஏ.தேவராஜன்,மலேசியா
ovilak@yahoo.com
- வாழ்க்கை
- வேத வனம் விருட்சம் 65
- பதில்களின் சொரூபம்
- முள்பாதை 10
- கவிஞானி ரூமியின் கவிதைகள்(கி. பி. 1207-1273)கவிதை -2 பாகம்-4மதுக்குடி அங்காடி (The Tavern)
- பவனி
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 3)
- இராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை
- மலையமான் திருமுடிக்காரி
- பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை
- குழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்)
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.
- உயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள்
- இந்திய மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுப்பது (அல்லது சிதைப்பது) குறித்து
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -1
- ஏக்கத்தின் நீளம் 2010
- பாவப்பட்ட அது
- அப்பாவி சிறுவன்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -3
- பசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள்
- கோயிற் சிலையோ?
- மு டி வு அ வ ன் கை யி ல்!
- ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம்
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- விஷம்
- நான்
- டெர்மினெட்டர் ஒன்றும் இரண்டும்
- கூடல் பொழுதில் கசியும் கானல் நீர்
- இரண்டு கவிதைகள்