கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-3 மதுக்குடி அங்காடி (The Tavern)

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


போனது என் அகமும் புறமும் !
வான மில்லை ! வையம் இல்லை !
நிலவு மில்லை !
அடுத்துமோர் கிண்ணத்தில் ஒயினை
அளிக்காதீர் எனக்கு !
வாயில் ஊற்றுவீர் அதனை !
வழி மறந்து போனது
வாயிலே குடிக்கும் முறை !

கவிஞர் ரூமி

+++++++++++

நாமருந்தும் ஒயின் மெய்யாக
நமது குருதி யேதான் !
இந்த அண்டாக்களில்
புளித்துப் போய்
பொங்கியவை நம் உடல்கள் தான் !
இருப்பதை
எல்லாம் நாம் கொடுப்போம்
ஒரு குவளை ஒயினுக்கு !
தருவோம் நம் இதயத்தையும் கூட
ஒரு மடக்கு மது குடிக்க !

கவிஞர் ரூமி

+++++++++++

கவிதை -2 பாகம்-3

மதுக்குடி அங்காடி

குழந்தைகளின் விளையாட்டு

ஒதுங்கிக் கிடந்த கவிஞர் சேனாய்
உரைப்பதைக் கேளாய் :
“தெருவினில் அலைந்து திரியாதே
குடி போதையில் !
மதுக் கடையில் தூங்கு !”
தெருவில் திரியும் போது
குடிகாரனைக் கண்டு கேலி செய்யும்
குழந்தைகள் !
சகதியில் தடுமாறி விழுவான்
குடிகாரன்
எந்தத் தெருவிலும் போவான் !
எல்லாத் தெருக் களிலும் திரிவான் !
சிறுவர் அவன்பின் செல்வார்
ஒயின் சுவையை அறியார் சிறுவர்,
குடிகாரர் மனநிலை உணரார் !
ஒரு சிலரைத் தவிர
உலக மாந்தர் அனைவரும்
குழந்தைகள் தான் !
இச்சையில் மூழ்காத சிலரைத் தவிர
எல்லாரும்
முதிர்ச்சி அடையா தவர் !

+++++++++++++

இறைவன் கூறினார் இவ்விதம் :
“இவ்வுலகம் ஒரு நாடகம் !
சிறுவரின் விளை யாட்டுகள் அவை !
நீவீர் யாவரும்
விளையாட்டுப் பிள்ளைகள் !”
இறைவன் சொன்ன துண்மைதான் !
சிறுவர் விளையாட்டை
நீக்கா விடில் நீவீர்
முதியவர் ஆவ தெப்படி ?
ஆன்மீகத் தூய்மை அடையாது
ஆசைக்கும் காமத் துக்கும் இடையே
அடிமை யாய்க் கிடக்கிறீர் !
அவசிய மான வற்றிலும்
மதலையர் போல் வாழ்கிறீர்
உடலுறவு இன்பத்தில் திளைத்துப்
போராடுவர் அவர்,
புணர்ச்சி யில்லை அது !
மனித இனப் போர்களில் இதுபோல்
வாய்ப் போர் புரியும்
வெறும் விளையாட்டு வாள்கள் !
குறிக்கோ ளில்லாமல்
வீணாகும் முயர்ச்சி
முழுவதும் !

***************************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

+++++++

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 15, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts