ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
மதுவருந்தும் அங்காடி
“யாரிங்கு என்னை அழைத்துக் கொண்டு வருகிறாரோ அவர்தான் இல்லத்துக்கும் என்னை இழுத்துக் கொண்டு போக வேண்டும்.
மது குடிக்கும் அங்காடி ஒரு கீர்த்தி பெற்ற நரகம் ! அங்கே மனித இனம் மகிழ்ச்சியாகத் துயருற்றுச் சத்தியத் தேடலில் பின்தங்கிப் போகிறது ! மதுவருந்தும் கடை ஓர் அபாயக் குடிக் கூடம் ! அங்கே சில சமயம் மாறு வேடம் தேவைப்படுகிறது ! ஆனால் உனது இதயத்தை அங்கு நீ மூடிக் கொள்ளாதே ! அதைத் திறந்து வை ! மன முறிவு, வீதியில் ஒரு கூப்பாடு – இவை மதுக்குடிக் கடைகளிலிருந்து தொடங்குபவை. அங்கிருந்து மனித ஆத்மா தன் இல்லப் பாதை தேடி மீள்கிறது.”
கவிஞர் ரூமி (The Tavern)
முன்னுரை :
பாரசீகக் கவிஞர் ஜெலாலுதீன் ரூமி 1207 ஆம் ஆண்டில் தற்போது ஆ·ப்கானிஸ்தான் எனப்படும் பூர்வீகப் பாரசீக தேசத்தில் உள்ள பால்க் (Balkh) என்னும் இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே மங்கோலியர் படயெடுப்புக்கு அஞ்சி அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டுத் துருக்கியில் உள்ள கொன்யாவுக்கு ஓட வேண்டியதாயிற்று. அங்குதான் ரூமி தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடந்தார். நாஷாப்பூரில் (Nashapur) சில காலம் தங்கிய போது கவிஞர் அத்தார் (Poet Attar) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்தது. ரூமிக்கு வாய்த்த மகாக் குருமார்களில் முதல்வர் (Mentors) கவிஞர் அத்தார். ரூமியின் ஞானக் கொடையை அறிந்த கவிஞர் அத்தார் “அஸ்ரார் நமா” (Asrar Nama – The Book of Secrets) என்னும் நூலை அன்பளிப்பாகக் கொடுத்தார். 1226 இல் ரூமி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன்.
அறிஞராகத் திகழ்ந்த ரூமி டெர்விஸ் (Dervish) இஸ்லாமியக் குரு ஸாம்ஸ் ஆ·ப் தபிரிஷ் (Shams of Tabriz) அவர்களை 1244 இல் சந்தித்த பிறகு புத்துயிர் பெற்று அவரது ஆன்மீகச் சிந்தனையில் மகத்தான ஒரு திருப்பம் ஏற்பட்டது. “நெடுங் காலமாய் முன்பு நான் நினைத்து வந்த அந்தக் கடவுளைக் கண்டேன்,” என்று ரூமி அந்த தேவதூதரைக் கண்ட போது பெருமிதம் கொண்டார். மதக்குரு ஸாம்ஸ் அவர்களுக்குப் பிறகு ரூமியின் சிந்தனையைச் செழிக்கத் தூண்டியவர் ஸலாதீன் ஸர்கப் (Saladin Zarkub) பிறகு ஹ¤ஸம் (Husam) என்பவர். கவிஞர் ரூமி பல கவிதைகளில் விளிக்கும் “நீ” என்பது கடவுளா, ஸாம்ஸா அல்லது யார் என்பதை வாசகர்தான் யூகித்துக் கொள்ள வேண்டும்.
ஞானக் கவிஞர் ரூமி ஓர் மதஞானி, பேரறிஞர், இஸ்லாம் மதத்தின் ஒரு தூணாகக் கருதப்படுபவர். 1244 ஆண்டு ஆன்மீகத் திருப்பத்துக்குப் பிறகு ரூமி தனது 38 ஆவது வயது முதல் 24,000 பாக்கள் கொண்ட “மத்னாவி” (Masnavi or Mathnawi) என்னும் தன் படைப்பு நூலை எழுதத் துவங்கினார். அவரது அடுத்த புகழடைந்த நூல் “திவான்-இ-ஸாம்ஸ்-இ-தாமிரிஷ் (Divan-E-Shams-E-Tabriz – The Collective Poems of Shams of Tabriz) என்பது. ரூமியின் கவிதைப் படைப்புகளில் ஒரு வித “மாயப் புதிர்” (Mystic Connotation) புரிந்தும் புரியாத பொருளில் புலப்படும். ரூமியின் பட்டப் பெயர் “மௌலானா”. மௌலானா என்றால் நமது கோமான் (Moulana means our Master) என்று பொருள். ரூமிக்குப் பிடித்த இசைக் கருவி புல்லாங்குழல். பாரசீகப் பாக்களை இசைக் கருவிகள் மூலம் பாடலாம் அல்லது வாசிக்கலாம்.
ரூமியின் கவிதைகள் பன்னாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அவரது ஞானக் கருத்துக்கள் அகில நாடுகளுக்கும் உகந்தவை. கவிஞர் ரூமி கொய்னாவைச் சார்ந்த “மெவ்லெவி மதக்குழு நெறி” (Mevlevi Dervish Order, called Whirling Dervishes) எனப்படும் “இசைப்பா ஆட்டக் குழுவின்” துவக்கப் பிதா. ரூமி இஸ்லாமியர், யூதர், கிறித்துவர் ஆகிய மூன்று மத இனத்தவர் மீதும் சமமான மதிப்பைக் கொண்டவர். பாரசீகக் கவிஞர் ரூமி உலகிலே மிகப்பெரும் “ஸ¤·பி மாயப் புதிர் கவிஞராக” (Sufi Mystic Poet) மதிக்கப் படுகிறார். ரூமியின் கருத்து : “கடவுளைத் தவிர வேறோர் கடவுள் இல்லை. கடவுள் என்பவர் ஒருவரே.” 1273 டிசம்பரில் ரூமி நோய்வாய்ப் பட்டுத் தன் மரணத்தைத் தானே முன்கூட்டி அறிவித்துப் புகழ் பெற்ற கஜல் (Ghazal) கவிதை ஒன்றை எழுதினார் :
எப்படி நீ அறிவாய்
என்னுள்ளே துணையாய்
எத்தகைய
மன்னவன் ஒருவனை
மறைத்து வைத்துளேன் என்று ?
என் பொன் முகத்தை
நோக்காத வண்ணம்
உன் ஓரக்கண் பார்வையைத்
தவிர்த்திடு !
ஏனெனில் இரும்பால் ஆனவை
எனது கால்கள் !
++++++++++++++++
கவிதை -2 பாகம்-1
மதுவருந்தும் அங்காடி
பகல் பூராவும் சிந்திப்பேன் அதைப் பற்றி
பிறகு இரவில் அதைச் சொல்வேன் !
எங்கிருந்து வந்தேன் நான் ?
என்ன செய்திருக்க வேண்டும் நான் ?
ஒன்றும் நான் அறிந்திலேன் !
எங்கிருந்தோ வந்தது என் ஆத்மா
எனக்கது உறுதியாய்த் தெரியும் !
அங்கு போய் அடங்க முடிவில் ஆசை !
++++++++++++
எனக்கு இந்தக் குடிப் பழக்கம்
வேறோர் மதுக்கடையில் துவக்கம் !
எனக்கில்லை குடிமயக்கம் !
முழுச்சுய நினைவிருக்கும்
மீண்டும் நானங்கு உலவும் போது !
வேறு கண்டத்துப் பறவை போல்
ஒரு பெருங் கூண்டுக்குள் அமர்ந்துளேன் !
பறக்கும் நாளும் நெருங்கும் ! ஆனால்
யார் உள்ளார் காதருகில் என்குரல் கேட்க ?
யார் பேசுவார் என் வாயுடன் சேர்ந்து ?
++++++++++++
அப்பால் நோக்குவது யார் என் கண்களோடு ?
ஆத்மா வென்றால் என்ன ?
வாய் இனிக்கும் பதில் எனக்குள தென்றால்
இந்தக் குடிச்சிறை உடைக்க முடியும் என்னால் !
நானாகப் பிறந்திலேன் இங்கே என் இச்சைப்படி
நானிதை நீங்கவும் இயலாது விருப்பப்படி !
இங்கு என்னைக் கொண்டு வந்தவரே
இழுத்துச் செல்ல வேண்டும் மீண்டும் வீட்டுக்கு !
++++++++++++
இக்கவிதையில் என்ன சொல்வேன்
என்பதை நான் அறியேன் !
அதைத் திட்ட மிடுவ தில்லை !
வெளியே நான் சொல்லும் போதில்
மிக்க அமைதி யாக இருப்பேன்
அபூர்வ மாகத் தான் பேசுவேன் !
***************************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
+++++++
On-line texts and translations of Rumi
“MA-AARIF-E-MATHNAVI A commentary of the Mathnavi of Maulana Jalaluddin Rumi (R.A.)”, by Hazrat Maulana Hakim Muhammad Akhtar Saheb (D.B.), 1997
Four new translations of Rumi poems by Coleman Barks
Rumi poetry set to beautiful Persian Music on Mp3 and CD
The Masnavi I Ma’navi
Dar al Masnavi
(Rumi.net) Rumi’s little-known biography and poems (Quatrains and Odes) in English by
Quatrains at Iranian.com
On Rumi
The Foundation of Universal Lovers of Mevlana Jelaluddin Rumi (EMAV)
The Rubaiyat of Rumi
Rumi, Poet of Love and Justice
Jalaluddin Rumi
About Rumi, English translations and personal/rare biography
Several Rumi Poems (Quatrains and Odes) in English
Iranian studies site
The Threshold Society and Mevlevi Order
The Mevlevi Order of America
Official website of the Family of Jalal al-Din Muhammad Rumi
Mevlana
Mawlana Jalal al-Din Rumi- Mevlevi webpage
RumiOnFire.com – A Tribute to Rumi
What goes round…
Rumi Lectures at Harvard University
Rumi and the Tradition of Sufi Poetry
Mewlana Jelal Ad-Din Rumi
Treasures of Persian Literature
Guernica Magazine (guernicamag.com) on the 800th anniversary of Rumi’s birth
Sermon on Rumi
Can Rumi Save Us Now?
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 1, 2009)]
- புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 2
- நிறைவு?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20 பாகம் -2
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-1 மதுவருந்தும் அங்காடி (The Tavern)
- வேத வனம் -விருட்சம் 62
- யானைகளை விற்பவன்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! கரும்பிண்டம் வடித்த பேரளவு பெரிதான ஒளிமந்தைச் சந்தைகள் (Galaxy Superclusters) (கட்டுரை
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்
- நகரத்தின் வாழ்வும் வதையும் கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி”
- தந்திரங்களின் திசைகளும் அன்பின் பயணமும் ஜெயந்தி சங்கரின் “குவியம்”
- நூல் அறிமுகம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.
- பாரதி விழா அழைப்பிதழ்
- புரிவதே இல்லை இந்தக் கதைகள்
- சுருதி லயம்…
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -10
- முள்பாதை 8 (தெலுங்கு தொடர்கதை)
- ஆச்சரியமான ஆச்சரியம்
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- லிபரான் அறிக்கை – அரசியல் – நீதி.
- இந்தியோடு உறவு
- அருகிப் போன ஆர்வம்
- மலாக்கா செட்டிகள்
- மலாக்கா செட்டிகள் (கட்டுரை தொடர்ச்சி)
- நினைவுகளின் தடத்தில் – (39)
- நாடக வெளி வழங்கும் மாதரி கதை