கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20 பாகம் -2

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Kahlil Gibran Paintings
The Suppressed Womenfolk

“கடவுள் தன்னிடமிருந்து ஓர் ஆன்மாவை வெளியாக்கி அதை ஓர் எழில் மாதாக உருவாக்கினார். . . . . அவளுக்குப் பரிவை அளித்தார். அந்தப் பரிவும் அவளுக்குப் புவிப் பொருட்களின் மீது ஏற்பட்ட வேட்கைப் பெருமூச்சில் நிரந்தரமாய் நீங்கி விட்டது ! அவளுக்கு இனிமையை அளித்தார். அந்த இனிமையும் அவளுக்கு எப்போது முகத்துதி மீது முதலில் மோகம் ஏற்பட்டதோ அப்போது அவளைப் புறக்கணித்தது !

நேர்மையான பாதையில் வழிநடத்த வானிலிருந்து அவளுக்கு ஞானத்தைக் கொடுத்தார் கடவுள். அதை அவளது இதயத்தினுள்ளே காண இயலாதவற்றைக் காணும் ஒரு கண்ணை வைத்து அனைத்து உயிரினம் மீதிலும் பந்த பாசத்தையும் உண்டாகச் செய்தார். . . மேலும் அவளுக்குக் கடவுள் குழப்பத்தின் நிழலாக ஓர் அங்கியைப் போர்த்தினார். அதுவே வாழ்க்கையின் காலைப் பொழுதாகவும், ஒளி விளக்காகவும் அமைந்தது.”

கலில் கிப்ரான் (படைப்பு)

+++++++++

<< புன்னகையும், கண்ணீரும் >>

கவிதை -20 பாகம் -2

இரவு வரும் வேளைப்
பூவிதழ்கள்
மூடிக் கொண்டு
தூங்கி விடும் காதலுடன் !
காலை விடிந்ததும்
முத்தமிட்டுக்
கதிரவனை வரவேற்க
கண்விழிக்கும் பூவிதழ்கள் !
முகில் கூட்டம் அவற்றின் மீது
புள்ளிகள் வைக்கப்
புகுந்திடும் !
பிறகு உறுதியாய் நீங்கும் !
பூக்களின் வாழ்க்கை
நமக்கு அளிப்பது
நம்பிக்கை, அமைதி, திருப்தி மற்றும்
புன்னகையும் கண்ணீரும் !

+++++++++++++++++

நீர் வளம் மறையும் ஆவியாகி !
மலை உச்சிகளின் மீதும்
பாதாளத்தின் கீழும் பனியாகிப்
படிந்திடும் முகிலாகி !
தென்றலைச் சந்திக்கும் போது
நிலத்தின் மீது மழையாய்ப் பொழிந்து
நீரோடை யுடன் கலந்து
கடலை நோக்கிப் பாதையில்
கானமிசைத் தோடும் !
முகிலின் வாழ்க்கை
விடைபெறும் ஒரு போக்கு !
புன்னகை கண்ணீருடன்
மீள் சுழலும் வாழ்வு !

+++++++++++++

இவ்விதம் ஆன்மா நீங்கிடும்
உடலை விட்டு ! முகிலைப் போல்
கடந்து செல்லும்
உலோகவியல் உலகை விட்டு
துயர்க் குழியைத் தாண்டி
பூரிப்பு மலைகளுக் கப்பால்,
மரணத் தென்றல் சந்திக்கும் வரை
மறுபடியும்
பிறந்தகம் நோக்கிச் செல்லும் !
நித்திய அன்புக்கடல்,
அழகுத்துவம் !
அவையே கடவுள்
இருப்பிடம் !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 1, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts