மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Kahlil Gibran’s Paintings
Kahlil’s Sister Marianna Gibran
“வாழ்க்கையில் உள்ள ஒவ்வொன்றும் நற்பயனை அளிப்பதுதான். பொன்னைத் திரட்டப் போவதிலும் ஒரு போதனைக் கல்வியைக் கற்றுக் கொள்ளலாம். செல்வம் என்பது நாண்கள் முறுக்கிய ஓர் இசைக்கருவி ! அதை எப்படி முறையாகப் பயன்படுத்துவது என்று தெரியாதவன் அதிலிருந்து வரும் அபத்தமான சங்கீதத்தை மட்டுமே கேட்பான். செல்வம் என்பது காதல் போன்றது ! சேமித்து வைப்பவனை வேதனை கொடுத்து மெதுவாகக் கொல்கிறது அது ! குடிமக்களுக்காகச் செலவு செய்பவனைச் செல்வம் சீராக வாழ வைத்து மேல் தூக்கி விடுகிறது.”
கலில் கிப்ரான்
+++++++++
<< நேற்றைய கூக்குரல் >>
கவிதை -17 பாகம் -4
+++++++++++++++++
அறிவுச் சுடர்விளக்கு மங்கி
அணையப் போகிறது !
அதற்கு எண்ணெய் ஊற்றும்
நேரம் வந்து விட்டது !
மெய்யான செல்வ மாளிகை
தகர்க்கப் படுகிறது !
மீண்டும் அதைக் கட்டிப்
பாதுகாக்கும்
வேளை வந்து விட்டது !
அறிவுக் களவாடிகள்
அமைதிக் களஞ்சியத்தைத்
திருடிப் போனார் !
மறுபடி அதைக் கைக்கொள்ளும்
தருணம்
வந்து விட்டது !
+++++++++++++
இதுதான் மக்கள் கூறிடும்
செல்வமா ?
இதுதான் நான் வழிபட்டுப்
பணி செயும் கடவுளா ?
இதுதான் இந்தப் புவியில்
நான் தேடும் ஆசைப் பொருட்களா ?
ஏன் ஒரு துளித் திருப்திக்கு
இவற்றை
மாற்றக் கூடாது நான் ?
ஒரு டன்
பொன் கட்டிகளுக்கு
யார் விற்ப தெனக்கு
ஓர் உன்னத சிந்தனையை ?
++++++++++++++++
கை நிறைந்த
வைரக் கற்களுக்கு
எவரெனக்கு
அன்பு தனை அளிப்பார்
இமைப் பொழுது ?
யாரெனக்கு
ஓர் கண் அளிப்பார்
படி பணத் துக்கு நான்
பண்டம் மாற்ற ?
மற்றவர்
உள்ளத் தினை
ஊடுருவிப் பார்க்க ?
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 10, 2009)]
- வங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 60 << நமது பிரச்சனைகள் நீங்கும் >>
- சந்தர்ப்பவாதிகள்
- இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)
- என் எழுத்து அனுபவங்கள்
- நூல் அறிமுகம்: ‘குறுந்தொகை’க்கு ஒரு புதிய உரை
- குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா
- கடிதம்
- மறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்) தீட்சண்யம் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா
- திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -4
- நான் மட்டும் இல்லையென்றால்
- இயல்பாய் இருப்பதில்..
- நுவல்
- அம்ரிதா
- மீண்டும் துளிர்த்தது
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -7
- வேத வனம் -விருட்சம் 59
- முள்பாதை 5
- வார்த்தை நவம்பர் 2009 இதழில்…
- எனக்காக நீ கட்டுவதாய் சொன்ன சொர்க்கம்
- மழையும்…..மறுக்கப்பட்ட நானும்………..
- நகரத்துப் புறாவும், நானும்!
- பயணம் சொல்லிப் போனவள்…
- கோரமுகம்