கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -3

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“இரைச்சல் மிக்க நகரத்தின் குடிமக்களே ! நீவீர் இருட்டில் வசித்துப் பொய் புரட்டுகளை மூடத்தனமாய்ப் போதித்துக் கொண்டு அறியாமையில் மூழ்கி இடரை நோக்கி விரைந்து செல்கிறீர் ! நீவீர் வாழ்க்கைச் சகதியில் உழன்று அதன் பூந்தோட்டத்தை விட்டு விலகிப் போகிறீர் ! இயற்கை வனப்பின் நாகரீகப் பட்டு உடுப்பு உமக்காகப் படைக்கப் பட்டுள்ள போது, கிழிந்து போய் இறுக்கமாக இருக்கும் ஓர் அங்கியை ஏன் உடுத்திக் கொண்டிருக்கிறீர் ?

அறிவுச் சுடர்விளக்கு மங்கிக் கொண்டு வருகிறது. அதற்கு எண்ணெய் ஊற்றும் நேரம் வந்து விட்டது. மெய்யானச் செல்வ மாளிகை தகர்க்கப் படுகிறது. அதை மீண்டும் எடுத்துக் கட்டிப் பாதுகாக்கும் வேளை அருகி விட்டது. அறிவுக் களவாடிகள் உமது மனச்சாந்திப் பொக்கிசத்தைத் திருடிப் போய் விட்டார். அதை மீண்டும் கைப்பற்றும் தருணம் வந்து விட்டது !”

கலில் கிப்ரான் (ஜெரூசலத்தில் ஜெரமையாவின் உபதேசம்)

+++++++++

Fig. 1
Kahlil Gibran’s Poem
Liberation of Mankind

<< நேற்றைய கூக்குரல் >>

கவிதை -17 பாகம் -3

வீதியில் நடந்து வரும்போது
வெறுப்புடன்
நோக்குவர் என்னை
பொறாமை யோடு !
பூங்கா வழியே
புகுந்து நான் செல்கையில்
எள்ளி நகையாடி
ஏளனமாய் நோக்கும்
முகங்கள்
என் கண் முன்னே
தெரிகின்றன !

+++++++++++++

நேற்றைய தினத்தில்
செல்வந்தனாய் இருந்தேன்
பூரிப்போடு !
இன்று நான்
ஏழை யாகிப் போனேன்
பொன்னோடு !
நேற்று நான்
ஆட்டு மந்தையைக்
கண்காணித்துக்
களிப்போ டிருந்த
ஓர் ஆட்டிடையன்
திருப்தியுள்ள
குடிமக்கள் மீது
பரிவு காட்டும் ஓர்
அரசன் போல் !

+++++++++++++

இன்று நான்
என் சொத்துச் சேமிப்புகள்
முன்னே
ஓர் அடிமையாய்
நிற்கிறேன் !
முன்பு நானறிந்த
நன்னெறி வாழ்வின்
எழில் மயத்தைக்
களவாடிப் போனது
எனது செல்வீகக்
களஞ்சியம் !

++++++++++++

மன்னிப்பீர் என்னை
என் நீதிபதியே !
அறியாமல் போனேன் எனது
செல்வச் சேமிப்புகள்
எல்லாம்
சிதறடிக்கும் என் வாழ்வை
என்று !
அறியாமல் போனேன்
அது என்னை
வெறுப்பிலும்
இருட்டுக் குகையிலும்
முரட்டுத் தனத்திலும்
விரட்டித் தள்ளும் என்று !
பெரும்புகழ் என்று நான்
நினைத்த தெல்லாம்
நீடித் தெரியும்
நெருப்பைத் தவிர
வேறில்லை !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts