பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 59 << உன் தூய கொடைகள் >>

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பசுமை நிறம் ! பேரமைதி !
வெளிச்சத்தில் ஈரம் !
மாட்டில்தி(*) ! நீ
தென்கரைப் பகுதிகளில்
கடலையும் மணல் கற்களையும்
கடந்த போது
பகல் வேளையில்
ஜூன் மாதம் நடுங்கியது
பட்டாம்
பூச்சி போல் !

++++++++++

இரும்புப் பூக்களைக்
கரங்களில் நீ
பளுவாய் ஏந்திச் செல்கையில்
கடற் பசிகள் மோதின !
தென்திசைக் காற்று
புறக்கணிக்கும் ! ஆயினும்
அரித்திடும்
உன் உப்புக் கரங்கள்
இன்னும் வெளுத் திருக்கும்
மணலிலே
மலர்ந்த செடித் தண்டுகள்
கலந்து போய் !

+++++++++++

உனக்குக் கிடைத்துள்ள
தூய்மை யான
கொடைகள் மேல் காதல்
எனக்கு !
பளிங்கு போன்ற தோல்
உனக்கு !
உன் நகங்கள்,
உன் வெகுமதிகள்
உன் விரல்களின்
பரிதிகள் !
பூரிப்பு பொங்கிப் பூக்கும்
உனது வாயில் !

++++++++++++

பாதாளக் குழிக்கு அருகில்
உள்ள
எந்தன் இல்லத்தில்
சித்திர வதையில் கட்டிய
அந்த மௌனத்தை
அளிப்பாய் நீ
எனக்கு
மணல் வெளியில்
மறந்து போன
கடற்கரை
மாளிகையி லிருந்து !

++++++++++++++
மாட்டில்தி(*) – காதலியின் பெயர்
++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 2, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts