கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >>

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாFig. 1
Kahll Gibran Paintings
“The Angel”

“நீ என் சகோதரன். ஏனெனில் நீ மனித நேயனாய் இருக்கிறாய். மேலும் நாமிருவரும் ஒரே புனித ஆன்மாவின் புதல்வர். நாம் சமமானவர். ஒரே மண்ணில் இருவரும் வடிக்கப் பட்டவர். வாழ்க்கைப் பாதையில் நீ எனது துணைவனாக இங்கிருக்கிறாய். மறைந்திருக்கும் மெய்ப்பாட்டின் உட்பொருளைப் புரிந்து கொள்ள நீ எனக்கு உதவி செய்வாய். மனித நேயனாக நீ இருப்பதே போதுமானது நான் உன்னைச் சகோதரனாய் நேசிப்பதற்கு. என்னைத் தேர்ந்தெடுத்த சமயத்திலே நீ என்னோடு உரையாடலாம். ஏனெனில் நாளைய தினம் உன்னை மறைத்துவிட்டு உனது பேச்சை அவனது நியாயத்துக்குச் ஒரு சான்றாகப் பயன்படுத்தும். அதற்குப் பிறகுதான் உனக்கு நியாயம் வழங்கப்படும்.”

கலில் கிப்ரான்

+++++++++

<< நேற்றைய கூக்குரல் >>

கவிதை -17 பாகம் -2

எங்கே மறைந்தன
அகண்டவெளிப் புஞ்சை வயல்கள் ?
எங்கே வரண்டன
இசைத்தோடும் நீரோடைகள் ?
புனிதத் தென்றல்
எங்கே
உணர்வ தில்லை ?
இயற்கையின் நெருக்கம் ஏன்
இல்லாமல் போனது ?
எங்கே
எனது இறைவன் ?

+++++++++++++

இழந்து விட்டேன் நான்
எல்லா வற்றையும் !
ஏகாந்தத் துயர் தவிர
எதுவும் மிஞ்ச வில்லை
என்னிடம் !
எள்ளி நகைக்கிறது
என்னை நோக்கிப்
பொன் கட்டிகள் எல்லாம் !
சாபம் இடுகிறார்
அடிமைகள்
என் முதுகுக்குப் பின்னால் !
உன்னதத்தில்
என்னிதயம் கவர்ந்து நான்
எடுத்துக் கட்டிய
என் உளங்கவர் அரண்மனையும்
இப்போ தில்லை !

+++++++++++++

திரிந்தேன் நேற்று நான்
ஒருங்கே
சமவெளிகளில், குன்றுகளில்
பெடோவி* இனத்தின்
நாடோடிப்
புதல்வி யோடு !
நேர்மையே
எமக்குத் தோழி !
காதல்
எமக்குக் களிப்பு !
நிலவே
எமக்குப் பாதுகாப்பு !
இப்போது என்னைச்
சூழ்ந்தி ருப்பது எல்லாம்
தாழ்ந்த வனப்பில்
தங்கத் திற்கும் வைரத்துக்கும்
தம்மை விற்கும்
விலை மாதர்கள் !

++++++++++++

நேற்று நான்
கவலை யற்றிருந்தேன்
ஆட்டிடைய ரோடு
உண்டு உறவாடி
ஆடிப் பாடி
அவருடன் விளையாடி
இதய மெய்நெறி இசையில்
ஒருமித் திருந்தேன் !
இன்று மக்கள் ஊடே நான்
காணப் படும்
மானிடர் :
ஓநாய்களுக் கிடையில்
ஒடுங்கிய
ஆடுகள் போல்வர் !

++++++++++
*பெடோவின் இனத்தார் *Bedouin : Semi-nomadic people of the coastal land of South Sinai near Egypt.

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 27, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts