பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 58 << உன் கை வல்லமை >>

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஆனால் மறந்து போனேன்
பின்னிய
ரோஜாக் களுக்கு
ஊடே போய்
உன் கைகள்
வேர்களுக்கு
நீர் ஊற்றிய தென்று !
உன் விரல் பதிவுகள்
பூத்தன
பூரண மாக
இயற்கை மௌனத்தில்
இருக்கும் வரை !

++++++++++

செல்லக் குட்டியைப் போல்
உன் மண் வெட்டியும்
நீர் தெளிக்கும்
பூவாளியும்
நிலத்தைக் கொத்திச்
சமப் படுத்தி
நிழல் போல்
சுற்றி வரும் உன்னை !
அப்பணி
ஒப்பிலாப் புது வாசம்
உண்டாக்கி
வளப்படுத்தும் செழிப்பை !

+++++++++++

தேனீக்களின் பெருமிதமும்
பாசமும் உன்
நேசக் கைகள் பெற
ஆசைப் படுபவன் நான் !
அவ்விதம்
அடைக் காக்கும்
இனங்களைப் பெருக்கிக்
கலப்புடன்
விருத்தி செய்து என்
உள்ளத்தையும்
உழுது வளப்படுத்தும்
உன் கரங்கள் !

++++++++++++

நானொரு கரிந்து போன
பாறைக் கல்
போன்றவன் !
அதன் அருகில் நீ
உள்ள போது
அது வாயால் பாடும்
உடனே !
ஏனெனில் அது
கானகத்தில் நீ கொணர்ந்த
நீரைக் குடிக்கும்
நின் குரலைக் கேட்டு !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 28, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts