பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 56 << கடற் கன்னி >>

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கடற் புதல்வி நீ !
ஆரிகானோவின் சொந்தக்காரி !
நீச்சல் குமரி நீ !
மேனி நீர் போல் தூயது !
சமையல்காரி நீ !
உன் குருதி விரையும்
மணல் போல்.
புரியும் வினைகளில் எல்லாம்
பூக்கள் பொழியும் !
பூமி வாசனை வழியும் !

++++++++++

கடலை நோக்கிப் போகும்
உன் கண்கள் !
குப்பென எழும்பும்
அப்போது பேரலைகள் !
நிலத்தை நோக்கி நீளும்
உன் கைகள் !
பொங்கி முளைத்தெழும்
அப்போது விதைகள் !
உன்னுள் கலந்த
களி மண்ணைப் போல்
பூமியின் வளமையும்
நீரின் முதன்மையும் ஆழ்ந்து
நீ அறிவாய் !

+++++++++++

நாடியா !
வெட்டிக் கூறுபோடு
உன் உடலை !
அத்துண்டங்கள் புத்துயிர்
பெற்றெழும்
சமையல் அறையில் !
அதுபோல் தான்
நீ வாழும்
எதுவு மாக மாறுவாய் !

++++++++++++

தூங்கு நீ ஆதலால்
துயர்களைத் தீர்க்கும்,
எனது கைகள்
உனைக் கட்டி அணைப்பதிலே !
ஓய்வெ டுப்பாய் நீ
அப்போது !
காய் கறிகள் கடல் விதைகள்
மூலிகைகள்,
உனது கனவு
நுரைகள் !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 13, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts